பக்கம்:Humorous Essays.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

ஹாஸ்ய வியாசங்கள்

ஆப் இங்கிலீஷ் வொர்ட்ஸ் (lots of English words) யூஸ் (use) பண்ராங்க” என்றார்! இந்த கஷ்டத்தை நான் பாரிடம் சொல்வது?

தமிழ் பாஷை மாத்திரம் தெரிந்தவர்கள் கூட, பேசும் பொழுது மிகவும் கொச்சையாய்ப் பேசுகிறார்கள்-அதிலும் முக்கியமாக சென்னைவாசிகளைப் பற்றி கேட்க வேண்டியதில்லை. தமிழில், ஆங்கிலம், தெலுங்கு, இந்துஸ்தானி முதலிய பதங்களைக் கலந்து கதம்ப பாஷையாக்கி விடுகிறார்கள். ஏறக்குறைய திருத்தமாகத் தமிழ் பேசும் யாழ்ப்பாணிகள் சென்னை வாசிகள் பேசும் தமிழைக் கேட்டு, இது தமிழ்தானே என்று ஆச்சரியப் படுகிறார்கள்.

பேசும் பொழுதே இக்கதியென்றால், எழுதும் பொழுது கேட்க வேண்டியதில்லை. காலணா கார்டில் தமிழில் பி.ஏ., பட்டம் பெற்ற ஒருவர் எழுதும் பொழுது, ஒரு பிழைக்கு தம்பிடி கொடுப்பதானால், இரண்டணாவிற்கு மேல் அபராதம் கொடுக்க வேண்டும். ர (மெல்லினம்) ற (வல்லினம்) என்று எழுத்துகளுக்கு பேதமேயில்லை என்று நிரூபித்து விடுகிறார்கள். அன்றியும், ந, ன, எனும் இரண்டு எழுத்துகள் என்னத்திற்கு ஏதாவது ஒன்றே போதும் எனும் கொள்கை யுடையவர்களாயிருக்கின்றனர் பெரும்பாலார். தன் பெயருக்குப் பின் நான்கு எழுத்துகள் (பி. ஏ., பி. எல்.,) பட்டம்! ஒரு தமிழர் தன் பெயரை “றாமசாமி ஐயங்கார்” என்று தமிழில் தன் கடிதத்தின் தலைப்பில் போட்டுக் கொள்ளுகிறார்! தமிழில் அச்சிடுபவர்களாவது இதையெல்லாம் கவனிப்பார்கள் என்றாலோ, அதையும் காணோம். ஒரு தமிழ் விளம்பரத்தில் “சவால் கூருதல்” என்று அச்சிடப்பட்டிருக்கிறது! இதில் இன்னொரு வேடிக்கை யென்னவென்றால், இதை அச்சிட்ட தமிழருக்கு சவால் எனும் இந்துஸ்தானி பதத்திற்கு தக்க தமிழ் பதம் கிடைக்கவில்லை போலும். ‘கேள்வி’ எனும் பதத்தை அவரது செவிகள் கேட்டில்லை போலும்.

மதுரையென்பது செந்தமிழ் நாடு என்று எல்லோராலும் மதிக்கப்படுகிறது. அங்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உற்சவப் பத்திரிகையில், ஒருவர் பெயர் “வெங்கடாஜல ஐயர்” என்று அச்சிடப்பட்டிருக்கிறது! வேங்கடம் எனும் அசலத் (மலை) தைப் பற்றி அறிந்திருக்கிறேன், வேங்கடம் எனும் ஜலத்தை (நீரை)ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/50&oldid=1360497" இலிருந்து மீள்விக்கப்பட்டது