பக்கம்:Humorous Essays.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஹாஸ்ய வியாசங்கள்

45

பற்றி கேள்விப்பட்டதில்லை. இவ்விதமே நமது பண்டாரங்கள், அருணாசலத்தை (அருண + அசலம்) அருணாஜலமாக்கி விடுகிறார்கள். அசலம் என்றால் சலனமில்லாதது என்று பொருள் படும், ஆகவே யாவராலும் அசைக்க முடியாத மலைக்குப் பெயராயது; எந்நேரமும் சலனமுடையதாயிருக்கும் ஜலத்திற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?

நமது முனிசிபாலிடியார் தமது பணத்தை மிகவும் சிக்கன மாகச் செலவழிக்க வேண்டியவர்கள் கூட, வீதிகளின் பெயர்கள் எழுத வேண்டிய பலகைகளில், தெரு என்னும் பதமிருக்க, அதற்கு ஒரு எழுத்தைச் சேர்த்து ‘தெருவு’ என்று எழுதி விடுகிறார்கள்!

சிலர் தமிழ் பாஷையை மிகவும் இலக்கணமாகப் பேசுகிறோம் என்றெண்ணி, ‘தேகம்‘ என்பதற்குப் பதிலாக ‘திரேகம்‘ என்று உச்சரிக்கின்றனர்! இவ்விதமே மற்றும் சிலர் விற்குமிடம் என்பதற்குப் பதிலாக விர்க்குமிடம் என்று வரைகின்றனர்.

தமிழர்களாய்ப் பிறந்தவர்கள் தமிழ் பதங்களை உபயோகிப்பதற்கே இக்கதியானால் மற்ற பாஷைகளிலுள்ள பதங்களை உபயோகிப்பதில் நாம் என்ன சொல்லக் கூடும்? “துரெளபதி வஸ்திராபஹரணம்” என்பது ஒரு பாரதக் கதையாம், வஸ்திரம் + அபஹரணம், என்பவை இரண்டு வடச் சொற்களாம்; அதை மாற்றி அநேகப் பத்திரிகைகளில் “துரெளபதி வஸ்திராபரணம்” என்ற அச்சிட்டதைப் பார்த்திருக்கிறேன். இதைப் பிரித்தால் வஸ்திரம் + ஆபரணம் என்றாகும். துரெளபதி வஸ்திராபரணம் என்பது வியாச பாரதத்தில் இல்லாத புதிய கதை போலும்.

தமிழில் பிரசங்கம் செய்யும் பாகவதர்கள் விஷயத்திலேயே இப்படியானால், சாதாரணமாகக் கொச்சையாகப் பேசும் நடிகர்கள் விஷயத்தில் நாம் எப்படி குறை கூறுவது?

நடனம் செய்யும் மாதை “நடினமாது” என்று சங்கத்தில் அழைத்தால், அவள் கதாநாயகனை “”பிராணி நாதா” என்று கூப்பிடுவதில் தவறென்ன? இதற்கும் அதற்கும் சரியாகவிருக்கிறதல்லவா?.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/51&oldid=1360575" இலிருந்து மீள்விக்கப்பட்டது