பக்கம்:Humorous Essays.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

ஹாஸ்ய வியாசங்கள்

கடைசியாக நமது தமிழ் சங்கீத வித்வான்கள் வேறு பாஷையைக் கொல்லும் விதத்தை கூறி முடிப்போம். ஒரு சங்கீத வித்வான், தமிழர் அவர், சம்ஸ்கிருதமும் தெலுங்கும் கொஞ்சமும் அறியாதவர், தியாகையர்வாள் கிருதி ‘நின்னெவானி’ என்பதைப் பாடிக் கொண்டு வந்தார். அதன் தாத்பர்யம் “ஹே ராமா! உன்னை யார் என்று நிர்ணயிப்பேன்-சிவன் என்பேனா, விஷ்ணுவென்பேனா, பிரம்மன் என்பேனா?” என்பதாம். “சிவுடனோ, மாதவுடனோ” என்பதற்குப் பதிலாக செவிடனோ? மா-தவுடனோ? என்று அரை மணி சாவகாசம் சங்கதிகள் போட்டு பாடினார். தியாகையர்வாள் தீர்க்க திருஷ்டியால் தன் பாட்டை இவ்வாறு கொலை செய்யக் கூடுமென்று தெரிந்திருப்பாராயின் இந்தக் கிருதியை எழுதியேயிருக்க மாட்டார் என்று நம்புகிறேன்.

“எந்துகு நிர்தயா” என்பது ஐயர்வாளுடைய மற்றொரு கிருதியாம். என் மீது கயையில்லாமலிருப்பதற்குக் காரணம் என்ன? என்பது அதற்குப் பொருளாம். இதை “எந்துகு நீ தயா?” ‘உன் தயை எனக்கு என்னத்திற்கு?’ என்று தமிழ் சங்கீத வித்வான்களில் சிலர் பாடுகின்றனர். இந்தப் பாபம் யாரைச் சாருமோ எனக்குத் தெரியாது. உங்களுக்குள் யாருக்காவது தெரிந்தால் தயவு செய்து எனக்கெழுதி யனுப்புங்கள்.

சுபவார்த்தை

தெற்கில் ராமநாதபுரம் தாலூகாவில் இளவூர் என்று ஒரு கிராமமுண்டு. அந்த கிராமத்தை அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் “எளவூர்” என்ற அழைக்க ஆரம்பித்து, வாழைப்பழம் “வாளப்பளம்” என்று மாறியது போல், ‘எழவூராக’ மாறியது.

இந்த கிராமத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலார், நாட்டுக்கோட்டை செட்டிமார்கள். அவர்களுள் நெடுங்காலமாக, பேசும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/52&oldid=1360613" இலிருந்து மீள்விக்கப்பட்டது