பக்கம்:Humorous Essays.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஹாஸ்ய வியாசங்கள்

47

“” ‘’

போதெல்லாம் ‘எழவு’ ‘எழவு’ என்னும் பதம், நடமாட வாரம்பித்தது. அதன் பேரில் அங்குள்ள ஒரு வயோதிகர் “இதென்ன நமது பிள்ளைகளெல்லாம் எங்நேரமும் எழவு எழவு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, பெரிய பேரெழவாகி விட்டது இந்த வழக்கம், இதை எப்படியாவது நாம் தடுக்க வேண்டும்” என்று எண்ணினவராய், ஒரு கூட்டம போட்டு, அதில் அவவூர் ஜனங்களையெல்லாம் வரவழைத்து, அதில் பிரசங்கம் செய்ய ஆரம்பித்த பொழுது, பெருங் கூச்சலாயிருக்க. “நண்பர்களே!-அடே சத்! -என்ன எழவு பெரிய கூச்சலாயிருக்கிறது!-இந்த பெருங் கூச்சல் எழவில்-நான் பேசுகிற எழவு-எப்படி கேட்கும்?-கொஞ்சம் சந்தடி போடாமலிருங்களையா எழவு!” -என்று உாக்கக் கத்தவே, கொஞ்சம் சந்தடி அடங்கியது. அதன் பிறகு அடியிற் கண்டபடி பிரசங்கம் செய்தார்:-

“நண்பர்களே! நாம் எல்லாம் இப்பொழுது ஒன்றாய்க் கூடியிருப்பது-நம்முடைய ஊரில் பலர், பேசும் போதெல்லாம் எழவு எழவு என்கிற எழவெடுத்த பதத்தை அடிக்கடி உபயோகிக்கிற வழக்கத்தை-எப்படியாவது எழவு-முற்றிலும் ஒழிக்க வேண்டுவதற்காம். நமது வாழ்க்கையில் ஏற்கனவே, துன்ப எழவு, காடாத்து எழவு, இந்த எழவு, அந்த எழவு முதலிய பல எழவுகள் இருக்கின்றன. சாதாரணமாகச் சுபமாகப் பேசும் பொழுதும் இந்த எழவை அடிக்கடி இழுத்துக் கொள்வானேன்? இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் - எழவு - கலியாண விஷயமாய்ப் பேசும் பொழுதும், இந்த எழவெடுத்த வார்த்தையை நம்மவர்கள் உபயோகிக்கிறார்கள் இந்த எழவு எனும் கெட்ட வார்த்தையை நமது பாஷையிலிருந்து, எடுத்து விட்டாலொழிய கம்மைப் பீடித்திருக்கும் இந்த எழவு-நம்மை விட்டுப் போகவே போகாது. ஆதலால் இந்த எழவெடுத்த பதத்தை நாம் இனி பேசும் போது உபயோகிக்கக் கூடாதென்று, நான் பிரேரேபிக்கிறேன்.”

அதன் பேரில் இதை ஆமோதிக்கும்படி, எ. மு. மு. ராமசாமி செட்டியார், கூட்டத்தின் அக்கிராசனதிபதியாகிய த மோ. கந்தன் செட்டியாரால் கேட்கப்பட்டபோது, அவர் “இதென்ன எள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/53&oldid=1360739" இலிருந்து மீள்விக்கப்பட்டது