பக்கம்:Lord Buddha.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 ፵፰፻ , 岛岛可, புத்த அவதாரம் (அங்கம்-5 புத்தபணி தங்களுடைய கர்மத்தைப்பற்றி எல்லோ ரும் புகழக் கேள்விப்பட்டு அதைக்காதாச நேரிற் கேட்க வேண்டுமென்று வந்திருக்கிறேன். ஐயா, ததாகதன் தான் கூறவேண்டுமோ, அல்லது அறிந்த மற்றப் பிட்சுக்களில் யாராவது கூறினும் போதுமோ ? தமக்குச் சிரமமா வில்லாவிட்டால் தமது கிருவாக் கினின்றம் கேட்க மிகவும் ஆவல் கொண்டிருக்கிறேன். பிட்சுக்கள். பகவன் காங்களும் அப்படியே விரும்புகிருேம். தாங்கள் எத்தனையோ முறை பிறருக்குக் கூறக்கேட்டும், இன்னும் கேட்கவேண்டுமென்கிற உவகையிருக்கிறது எங்களுக்கு, சலிப்பென்பது சற்றேனுமில்லை, அன்றி பும் ஒவ்வொருமுறை கேட்குக்தோறும் புதிய புதிய அர்த்தங்கள் தோன்றுகின்றன. - உங்கள் இஷ்டம், கேட்பவர்களுக்குசிரமமில்லாவிட்டால் சொல்பவனுக்கு என்ன சிரமம் இருக்கப்போகிறதுஅகாதபரிபாலகா, அலுப்படைத்திருக்கி முற்போல் காண் கிறது, அருகில் வந்து உட்கார்; பிட்சுக்களே, ஏனே யோரே, எல்லோரும் அமருங்கள். (எல்லோரும் உட்காருகின்றனர்.) நண்பர்களே ! இவ்வுலக வாழ்க்கையில் துக்கம் என்பது எதினிலும் எள்ளுக்குள் எண்ணெய்போ லிருக்கிற தென்று நாம் எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டிய தல்லவா ? மற்றவர். ஆம் ஆம். 品 பிறப்பதே துன்பம், பிணி துன்பம், மூப்பு துன்பம் சாக்காடு துன்பம், அன்பில்லாரோடு தொடர்பு துன்பம், அன்புள்ளாரிடத்தினின்றும் பிரிதல் துன்பம், விரும் பியதை அடையாமை துன்பம், வெறுப்புதைப் பெறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/99&oldid=727300" இலிருந்து மீள்விக்கப்பட்டது