பக்கம்:Mixture.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்மாண்ட டப்புவின் உலகப் பிரயாணங்கள் .9 பற்றி ஜாக்கிரதையாகச் சென்றேன். அந்த இடையர்களெல்லாம் கொஞ்சம் துராம் எனக்கு வழி காண்பித்துவிட்டு, பிறகு அக்கொடுங் கோளுய்க்குப் பயந்தவர்களாய், பின் தங்கிவிட்டனர். நான் மாத் திரம் எனக்கு சுபாவமாயுள்ள தைரியததுடன் என் துப்பாக்கியை மாத்திரம் கையிலெடுத்துக் கொண்டு, அவ்வடர்ந்த காட்டிற்குள் கோனயைத்தொடர்ந்து சென்றேன். கொஞ்சதுரம் சென்றபின் ஆகாயத்தையளாவிய விருட்சங்கள் மேலே அடர்த்திருந்தபடியால் சற்று இருளாயிருந்தது. அதனுல் நான் எத்திசை நோக்கிச் செல்கி றேன் என்பதையும் கவனிக்கமுடியவில்லை. உடனே ஒரு குகையின் வாயிலுக்கெதிர்போய்ச் சேர்ந்தேன். குகைக்குள் ஒருவேளை அக் கோனும் தங்கியிருக்கக்கூடும் என்று எண்ணினவனுய் உற்றுப் பார்க்க, சற்று தாாத்தில் ஒரு யானேக்குட்டிபோன்ற ஒரு உருவம் தெரிந்தது. அதுதான் அக்கோனுய் என்ற கண்டவனுய், இன்னும் அருகிற்சென்று உற்றப்பார்க்க, அதன் இரு கண்களும் இரண்டு நெருப்புப்பொறிகள்போல் பிரகாசித்தன . உடனே அதைச் சுடுவ தற்காக என் துப்பாக்கியைக் கையிலெடுத்து, அதனுள் குண்டு போட என் குண்டுப்பையைப் பக்கத்தில் தடவிப்பார்க்க அது சாதாரணமாயிருக்குமிடம் காணப்படவில்லை என்னுடைய மன கிலேமை அச்சமயம் எப்படி யிருந்திருக்கவேண்டுமென்று நீங்களே. யோசித்து அறியலாம். அப்பயங்காமான கோனுய்க்கும் எனக்கும் சுமார் பத்து கஜம் தானிருந்தது. என்னேக் கண்டதும் அக் கோனுய், நம்மை யாரடா இவ்வளவு தைரியமாக எதிர்க்க வருவது என்று ஆச்சர்யத்துடன் பார்த்தது போலும் அதை நேராகப் பார்ப்பதைவிட்டு என் கண்களே சற்று அப்புறம் அகற்றினுல், இப் படிப்பட்ட துஷ்டமிருகங்களின் வழக்கப்படி, தன்னேக் கண்டு பயப் படுவதாக எண்ணி, என்மீது உடனே பாய்ந்து என்னேக் கொன்று விடும் என்பதை அறிந்தவனுய், என் கண்களை அதன் கண்களை விட்டகலாது உற்றுப் பார்த்தேன்! இப்படி நாங்களிருவரும் பத்து நிமிஷம் வாையில் ஒருவரை ஒருவர் உற்றுப் பார்த்துக்கொண்டிருந் தோம். ஆயினும் எத்தனே கோம் நாங்கள் இப்படிப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடும்? அப்பொழுது எனக்கு ஒரு யுக்தி தோன் றியது. உடனே ஒரு கையால் என் துப்பாக்கியைப் பிடித்துக் 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/14&oldid=727306" இலிருந்து மீள்விக்கப்பட்டது