பக்கம்:Mixture.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பிரம்மாண்ட டப்புவின் உலகப் பிரயாணங்கள் மானுனது தண்ணீர் குடிக்க வந்து, கொட கொட என்கிற சப்தத் துடன் கண்ணீர் குடிக்க ஆரம்பித்தது. அம்மானை த மிகவும் அழ கிய இரண்டு கொம்புகள் உடையதாயிருந்தது. ராணியாருடைய தோட்டத்தில் அதைப் பிடித்துவைத்து வளர்த்தால் அழகா யிருக்குமே யென்று யோசித்தவனுய், ஒரு யுக்தி செய்து, அதைக் கொல்லாமல் பிடிக்க வேண்டு மென்னும் எண்ண முடையவனுய், நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த செர்ரி பழத்தின் கொட்டை பொன்றை அதன் மண்டைக்கு கோாக வீசி எறிந்தேன். இப்படிச் செய்ததில் என் அபிப்பிராயம் என்ன வென்ருல், அக்கொட்டை அதன் மண்டையில் தாக்கி அம்மான் மூர்ச்சையான உடனே அதைப் பிடித்துக்கொண்டு போகலாம் என்பதே. நான் எறிந்த அக்கொட்டையானது மானின் மண்டையில் சரியாகத் தாக்கிய போதிலும், மான் கீழே விழுந்து மூர்ச்சையாகாமல் வெருண்டு ஒடிப்போய் விட்டது. நமது எண்ணம் கைகூடவில்லையே என்கிற விசனத்துடன் நான் அன்று ராணியாரின் அரண்மனையைப் போய்ச் சேர்ந்தேன். காரியம் கிறைவேருதபடியால் இதைப் பற்றி ராணி யாரிடம் நான் ஒன்றும் சொல்லவில்லை. பிறகு பல வருஷங்கள் கழிந்தன. விக்டோரியா மகாராணி பார்களும் காலகதியடைந்தனர். பிறகு பட்டத்துக்கு வந்த ஏழா வது எட்வர்ட் சக்ரவர்த்தியவர்கள், இங்கிலாந்துக்குப் போ யிருந்த யென்ன தன்னுடன் ஸ்காட்லாந்துக்கு ஒரு முறை அழைத் துச் சென்றனர். இச்சமயம் ஸ்காட்லாந்திலுள்ள உயர்ந்த மலைப் பிரதேசங்களில் மான் வேட்டையாட என்னேத் தன்னுடன் அழைத் துச் சென்ருர்.தாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு புறமாய்ப் பிரிந்து சென்ருேம்; நான் இரண்டு மூன்று மான்களைச் சுட்ட பிறகு, -೯೦೩! களின் பின்னக மலைப்பிரதேசங்களில் ஒடிச்சென்ற இளைப்பிளுல் ஒரு கற்பாறையின் மீது சற்று படுத்தேன். உடனே நான் உறங்கி விட்டிருக்க வேண்டுமென்ற நினைக்கிறேன். கொஞ்சம் நாழிகைக் கெல்லாம் கண்விழித்து எழுந்திருக்க, சாயங்காலமாய் விட்டது. என்னேக்காணுேமே யென்று எங்கு அரசர் தேடுகிருரோ என்று அஞ்சினவனுய் எழுந்திருந்து அவரிருக்குமிடத்தைக் கண்டுபிடித்து இருட்டுமுன் அவர் பக்கம் போய்ச்சேர வேண்டுமென்று ஆவல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/19&oldid=727311" இலிருந்து மீள்விக்கப்பட்டது