பக்கம்:Mixture.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்மாண்ட டப்புவின் உலகப் பிரயாணங்கள் 13 கொண்டவஞய், நான்கு புறமும் சுற்றிப்பார்த்துவிட்டு அக்கற் பாறையின் கீழே நோக்க, என் கண்ணுக்கு ஒரு மிகவும் ஆச்சரிய மான காட்சி தென்பட்டது. அங்கிருந்த எல்லாச் செடிகளும் அசை வற்றிருக்க, ஒரு செடி மாத்திரம் இங்கும் அங்குமாக உலாவிக் கொண்டிருந்தது இதென்னடா இது இச்செடி எப்படி நடக் கிறது என்று யோசித்தவனுய், அது என்ன செடி யென்று உற்று நோக்க, அது ஒரு செர்ரி செடியாயிருந்தது அக் கற் பாறையின் அருகில் அச்செடி நடந்து வர, மெல்ல மேலேயிருந்த நான் அச் செடியிலிருந்த ஒரு செர்ரிப் பழத்தைப் பறித்து தின்றேன். உடனே நான் பலவருடங்களுக்கு முன் இத் தேசத்தில் சாப்பிட்ட செர்ரி பழத்தின் சுவையைப் போலவே யிருக்க, அந்த பழய ஞாப கம் எல்லாம் எனக்கு வந்தது. உடனே இச்செடி எப்படி நடக் கிறது என்று அறியவேண்டி அதன் மூலத்தைப்பார்க்க, அச்செடி ஒரு கிளைமானின் தலையில் முளைத் திருந்ததைக் கண்டேன்! அப் பொழுது அச்செடி நடந்து கொண்டிருந்த காரணத்தை அறிக் தேன்! முன்பு நான் அம்மானேப பிடிக்க எறிந்த செர்ரிக் கொட் டையானது அம்மானின் மண்டையில் தங்கவே, பிறகு அத் கொட்டை அங்கு வேரூன்றி செடியாக முளைத்து, நாளடைவில் பெரிய மரமாகி விட்டது. உடனே நான் கின்று கொண்டிருந்த கற். பாறையைச் சுற்றிக்கொண்டிருந்த அம்மான், மறுமுறை என் கைக் கெட்டிய துராம் வந்த பொழுது அம்மரத்தின் கிளையொன்றைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அதன் மூலமாக இறங்கி அம் மானின் பெரிய முதுகில் குதிரையின் மீது உட்காருவது போல் உட்கார்ந்து கொண்டேன். உடனே அம்மானே பயப்படவேண்டா மென்று தட்டிக்கொடுத்து, மான் பாஷையில் அரசரது வின்ட்சர் (Windsor Park) பார்க்கில் வைத்து நன்முகப் போஷிப்பதாக வாக்களித்து, அதன் இாண்டு க்ொம்புகளையும் இரண்டு கைகளினுல் பிடித்துக்கொண்டு, அதை அரசரிருக்கு மிடம் மெல்ல கடத்திக்கொண்டு போனேன். அங்கிருந்தவர்களெல்லாம் (அரசர் உட்பட) ஒரு மானின் தலே மீது பத்தடி உயரமிருக்கும் ஒரு மாம் முளைத்திருப்பதையும், அம்மானின் முதுகின் மீது நான் சவாரி செய்துகொண்டு வருவதையும் கண்டு மிகவும் ஆச்சரியப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/20&oldid=727312" இலிருந்து மீள்விக்கப்பட்டது