பக்கம்:Mixture.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்மாண்ட டப்புவின் உலகப் பிரயாணங்கள் 15 ஆலயம் என்னும் மலைமீதுள்ள என் பங்களாவின் உப்பரிகையில் ஒரு நாள் நான் வேடிக்கையாக டப்பூஸ் என்னும் பெரிய காற் முடியை விட்டுக் கொண்டிருந்தேன். டப்பூஸ் என்பது ஒரு பெரிய காற்ருடி யாம். சில சமயங்களில் அதன் வாலில் கழுதைகளைக் கூட கட்டிவிடுவது வழக்கமுண்டு. அதற்காக அதைவிடும் நூலானது மிகவும் பருமனுடையதாயிருக்கும். அப்படிப் பட்ட டப்பூசை நான் விட்டுக் கொண்டிருந்த பொழுது, வெகு துரத்தில் ஆகாயக் தில் அக்காற்ருடியை விட்டு விட்டு, என்னுடைய நூலெல்லாம் போக, அதன் முகனேயைமாத்திரம் இாண்டு கைகளாலும் கெட்டி பாய்ப் பிடித்துக் கொண்டிருந்தேன். உடனே திடீரென்று ஒரு பெருங் காற்று புறப்பட, அப்படியே வேகமாய் உயர்ந்த என் காம் முடியின் பின்னுல் அதன் கயிற்றைப் பிடித்துக் கொண்டிருந்த நானும் கிளம்பிவிட்டேன்! பிறகு என்ன செய்வது? கயிற்றைப் பிடித்திருந்த கையை விட்டால் நான் கீழே விழுந்து இறக்க வேண்டியதுதான். எங்குதான் போகிறதோ பார்ப்போம், ஸ்வாமி யிருக்கிருர், என்று கயிற்றைவிடாமல் அக்காற்ருடியுடன் ஆகாயத் தில் நானும் பறந்து சென்றேன். அனேகம் மயில் இவ்வாறு பறந்து போனபின், காற்று கொஞ்சம் பட்டாக, என் காற்ருடி கீழே இறங்க ஆரம்பித்தது; எங்கு நாம் சமுத்திரத்தில் விழுந்து விடுகிருேமோ என்று பயந்தேன்; தெய்வாதீனத்தால் ஒரு தீவில் என்னே மெல்ல இறக்க ஆரம்பித்தது. கீழே இறங்கும் பொழுது நான் கவனித்துப் பார்த்தேன். ஒரு அரசரது உத்யானவனம் போலிருந்தது. நடுவில் ஒரு பெரிய மாளிகை இருந்தது. சுற்றிலும் ஆயிரக்கணக்கான உயர்ந்த பெரிய விருட்கங்கள் இருந்தன. அவைகளில் ஒன்றின் நனியில் நான் இறக்கப்பட்டேன். நான் உடனே, மறுபடியும் ஏதாவது காற்றடித்தால், எங்கு மறுபடியும் காற்ருடியின் வாலில் சிக்கிக் கொண்டு பறக்க வேண்டுமோ என்று பயந்து, காற்ருடிக் கயிற்றை விட்டு விட்டேன். அம்மாத்தின் உச்சியில் கின்று நான்கு பக்கமும் சுற்றிப்பார்த்தேன். மிகவும் அழகான தோட்டமாயிருக் தது. ஒரு பெரிய மனிதர் (அவர் அத்தீவின் அரசரென்று பிறகு நான் கண்டேன்) நானிருந்த மாத்தின் கீழ் உலாவிக் கொண்டிருந்த தார். அவருடன் பேசலாமென்று வாய்கிறக்கு முன், மறுபடியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/22&oldid=727314" இலிருந்து மீள்விக்கப்பட்டது