பக்கம்:Mixture.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்மாண்ட டப்புவின் உலகப் பிரயாணங்கள் 17 எண்ணியவனுய் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி அத்தீவில் சில காலம் அரசனக ஆண்டுகொண்டிருந்தேன். ஆயினும் அவ்வாழ்வு எனக்குப் பிடிக்கவில்லை ; எப்படியாவது சீக்கிரம் அத்திவை விட்டு என் சொந்த தேசம் போக வேண்டுமென்னும் எண்ணம் என்னை எப் பொழுதும் பாதித்துக் கொண்டிருந்தது; இதற்கு ஒரு முக்கிய காரணம், அத்தீவின் வழக்கப்படி இறந்த மன்னாது மனைவிய ரெல்லாம், என் மனைவிகளானதேயாம். எப்படி அத்தீவினின்றும் தப்பி மறுபடியும் இந்தியா தேச மாகிய நமது நாட்டை வந்து சேர்ந்தேன் என்கிற கதையை இன் ைெரு சமயம் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். ஆருவது கதை கோனயைக் குதிரையாக்கிய கதை -سسستجسسس ருஷ்யாதேசத்து அரசரது குமாரத்தியின் விவாகத்திற்காக என்ன ஒரு முறை அத்தேசத்திற்கு வரும்படி எழுதியிருந்தார். அச்சமயம் பொலாண்டு தேசத்தின் வழியாக ரெயிலில் நான் அரசரது ராஜதானிக்குப் போகும்போது, வழியில் பனி அதிகமாக, ரெயில் பாதையெல்லாம் பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருந்த படியால், நான் ரெயில் விட்டிறங்கி, அக்தேசத்தில் பரிகாலத்தில் ஜனங்கள் சாதாரணமாகச் செல்லும் ஸ்லெட்ஜ் (Sledge) என்னும் ஒருவித வண்டியில் எறிச்சென்றேன். அது சக்காமில்லாக வண்டி, குதிரை கட்டி விழுப்பது; மறுகாள் கலியானமாகையால் அதற்குள் எப்படியும் மாஸ்கோ (Moscow) பட்டணம் போய்ச் சோவேண்டு மென்று அதிவேகமாய்க் குதிரையைக் துரத்திக்கொண்டு போனேன். சாயங்காலம் வழியில் ஒரு பட்டணத்தில் ஒரு சத்திரத்தில் (Inn) தங்கி போஜனம் கொண்டு புறப்படும் சமயத்தில், அச்சத்திரக்காரன் நான் மாஸ்கோவுக்குப் போவதையறிந்தவனுய், 'இன்றிரவு போக வேண்டாம், நாளை காலை புறப்பட்டுப் போங்கள்' என்று தடுத்தான். அதற்குக் காரணம் நான் கேட்க, வழியில் ஒரு பெருங்காடொன்று 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/24&oldid=727316" இலிருந்து மீள்விக்கப்பட்டது