பக்கம்:Mixture.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பிரம்மாண்ட . டப்புவின் உலகப் பிரயாணங்கள் செடி வாடி வதங்கி சுருண்டு போய் விட்டது ! சிக்கிாம் பூமண்டலம் திரும்பிப் போக வேண்டுமென்னும் எண்ணம் எனக்குண்டானதும் அச்செடியைப் பார்க்க, அது என் கண்ணுக்கும் புல்ப்படவில்லை ! நான் என்ன செய்வது எனக்கு அமிர்த மிருக்கும் இடத்தைக் காண்பித்த பெரியவரிடம் போய், என் கஷ்டத்தைத் தெரிவிக்க, அவர் எனக்கு ஒரு பெரிய குடையைக் கொடுத்து, சந்திரனி லுள்ள ஒரு பெரிய மலையின் உச்சியின் மீதேறி, இக்குடையைப் பிடித்துக் கொண்டு பூமியை நோக்கிக் குதிப்பாயாயின், இக்குடை விரிந்து, உன்னே ஒரு அபாயமுமின்றி பூமிக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும், என்று தெரிவித்தார். அவருக்கு வந்தனமளித்து, நமஸ்கா ாம் செய்துவிட்டு, அவர் சொன்னபடியே சந்திரனிடமிருந்த பெரிய மலையின் சிகரத்தின் மீதேறி, அவர் கொடுத்த குடையைப் பிடித்துக் கொண்டு பூமியைக் குறித்து, ஒர் நாள் பெளர்ணமியன்று நான் குதிக்க, குடைவிரித்து சீக்கிரம் பூமியை வந்து சேர்ந்தேன். இந்த ாக்சியத்தை மாத்திரம் பூமியிலுள்ளவர்களுக்குத் தெரிவிக்க அந்த மஹானிடம் உத்திாவு பெற்று வந்தமையால், குடையைப் பிடித் துக் கொண்டு உயரத்திலிருந்து கீழே குதிக்கும் விதத்தை, சில ஐரோப்பிய சிநேகிதர்களுக்கு தான் தெரிவிக்க, அதைக் கொண்டு அவர்கள் பாரசூட் (Parachute) என்னும் குடையை அவர்கள் உண்டு பண்ணிஞர்கள். இதுதான் நான் சந்திரமண்டலத்துக்குப் போய் அங்கிருக்கும் அமிர்தத்தைச் சாப்பிட்டு யெளவனம் மாரு திருப்பதின் ரகசியம். இக்கதையைப் பற்றி யாராவது சந்தேகப் பட்டால் நான் உபயோகித்த குடை இன்னும் என்னிடம் இருக்கிறது. அதை வேண்டு மென்ருல் இரவலாகத் தருகிறேன். அதை எடுத்துக் கொண்டு இமயமலைக்குப் போய், மவுண்ட் எவரெஸ்ட் (Mount Everest) என்னும் சிகரத்தின் மீதேறி, கீழே குதித்துப் பார்க்க லாம். ஆனல் என் குடைக்கு ஏதாவது சேதம் நேரிட்டால் அதை அவர்கள் சிலவில் மாாமத்து செய்து கொடுக்க ஒப்புக்கொள்ள வேண்டும். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/29&oldid=727321" இலிருந்து மீள்விக்கப்பட்டது