பக்கம்:Mixture.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்மாண்ட டப்புவின் உலகப் பிரயாணங்கள் 23 எட்டாவது கதை திமிங்கலத்தின் வயிற்றில் வசித்த கதை سیستم حساس ஒரு முறை நான் ஐரோப்பா கண்டத்திலிருந்த பொழுது, கிரீன்லான்ட் (Green Land) என்னும் தேசத்தைப் பார்க்கப் போனேன். ஒரு நாள் அங்கு கடற்கரையில் நான் ஸ்நானம் செய்து கொண்டிருக்கையில் ஒரு ஆச்சரியகரமான சம்பவம் எனக்கு நேர்க் தது. எனக்கு நன்ருய் நீந்தத் தெரியுமாதலால் கரையை விட்டு மூன்று மைல் துராம் வரையில் நீந்திக் கொண்டு போனேன். அவ் விடம் சமுத்தி அலை அதிகமாயில்லாதபடியால் மல்லார்ந்து படுத்துக் கொண்டு சமுத்திரத்தில் விளையாடிக் கொண்டிருந்தேன். திடீரென்று நான் மிதந்து கொண்டிருந்த ஜலமானது என் தலை பக்கமாக வேகமாய் இழுக்கப்பட்டது. இது என்ன ஆச்சரியம் என்று நான் திரும்பிப் பார்க்க, ஒரு பெரிய திமிங்கலமானது தன் வாயைத் திறந்து கொண்டு அருகாமையிலிருந்த கடல் நீரையெல்லாம் தன் அகண்ட வாய்க்குள் இழுத்துக் கொண்டிருந்தது ; உடனே அதன் வாயினின்றும் தப்பிச் செல்ல முடியாதென்று கண்டறிந்தவளுய், அதன் வாயருகில் நான் இழுக்கப் பட்ட பொழுது அதன் பற்கள் படாதபடி வேகமாய் உள்ளே நீக்கிச் சென்றேன். அந்த திமிங்கலம் பெரிய கிமிங்கலம் என்று முன்பே சொன்னேன். இவ்வளவு பெரி யது என்பது அதன் வயிற்றுக்குள் போன பிறகு தான் எனக்கு நன்ருய்த் தெரிந்தது ; அதன் வயிறு மாத்திரம் சென்னேயில் விக் டோரியா பப்ளிக்ஹால் என்று ஒரு கட்டடமிருப்பதாக உங்களில் சிலர் கேள்விப் பட்டிருக்கலாம், அவ்வளவு பெரியதாயிருந்தது. உள்ளே என் கண்ணுக்கு எப்படி இது புலப்பட்டது என்று நீங்கள் சந்தேகிக்கலாம். அதற்கு நான் காரணம் சொல்லாவிட்டால், இந்த உண்மையான கதையை நீங்கள் கம்பமாட்டீர்கள். இந்தத் திமிங் கலங்களெல்லாம் அடிக்கடி மூச்சுவிட சமுத்திர மேல் மட்ட த்திற்கு வவேண்டும்; அப்படி வரும் ஒவ்வொரு சமயமும் அது வாயைத் திறந்து (அல்லது மூக்கைத் திறந்து - எதை என்று என்னுல் உறு தியாய்ச்சொல்லமுடியாது) மூச்சுவிடவேண்டியிருக்கிறது அப்படிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/30&oldid=727323" இலிருந்து மீள்விக்கப்பட்டது