பக்கம்:Mixture.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岑独 பிரம்மாண்ட டப்புவின் உலகப் பிரயாணங்கள் செய்யும் பொழுதெல்லாம் வெளிச்சமானது அதன் வயிற்றுக்குள் பிரவேசிக்கும். அதனுல் அங்கு இருந்த பொருள்கள் முதலியவற்றை யெல்லாம் நான்பார்த்து அறிய அனுகூலமாயிருந்தது. இப்படி நான் அடைபட்டிருந்த பொழுது, அன்று காலை ஒன்றும் புசியாகிருந்த படியால், எனக்குப் பசி மிகவும் அதிகமாயிற்று; உணவிற்கு என்ன செய்வது என்று நான் யோசித்துக் கொண்டிருந்த பொழுது, அங்கு அதன் வயிற்றில் குளம் போலிருந்த அது உட் கொண்ட சமுத்திர ஜலத்தில், ஒரு சிறு படகு மிதந்து கொண்டிருக்கக் கண்டேன். உட னே சந்தோஷத்துடன் அப்படகில்மெல்ல ஏறிக்கொண்டேன். பிறகு மறு முறை உள்ளே வெளிச்சம் முன் சொன்னபடி வந்த பொழுது அப்படகில், என் அதிர்ஷ்ட வசத்தால், அதன் சொந்தக்காரர்கள் வைத்திருந்த பலஹாப் பெட்டியொன்று கிடைத்தது! அதை உடனே மிகவும் ஆவலுடன் திறந்து அதில் வைத்திருந்த பலஹாாங் களில் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, அதில் வைத்திருத்த ஒரு ஸ்பிரிட் 68am #37693) (Spirit Lamp) கொஞ்சம் காப்பி தயார் செய்து சாப்பிட்டேன்! என் பசி படங்கிய போதிலும், எத்தனை காலம் நாம் இக் திமிங்கலத்தின் வயிற்றிலிருப்பது என்னும் மனக் கவலை எனக்கு அதிகரித்தது. நான் எப்படி இதன் வயிற்றினின் அறும் தப்புவது என்று ஆலோசித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், திடீரென்று திமிங்கலத்தின் முதுகில் ஒர் இடி விழுந்தாற்போல் ஒரு பெரிய சப்தம் கேட்டது. உடனே திமிங்கலமானது இக்கப் பக்கமும் அந்தப்பக்கமும் புரள ஆரம்பித்தது ! நான் அதன் வயிற் றிற்குள் இருந்த படகின் இரண்டு பக்கங்களையும் கைகளால் கெட்டி யாகப் பிடித்துக்கொள்ளவேண்டியதாயிற்று. கொஞ்ச நேரத்திற் கெல்லாம் திமிங்கலமானது ஒரு பக்கமாக மிகவும் வேகமாய் இழுக் கப்பட்டதுபோல் எனக்குத் தோன்றிற்று. அது முதல் அது வாயைத் திறக்கவில்லை. அதன் காரணத்தைப் பிறகுதான் அறிச் தேன்; அது வாயைத் திறவாதபடியால், உள்ளே ஒரே இருட்டாய் விட்டது இதல்ை, (கொஞ்சம் பயத்தில்ை என்று நான் கிஜத் தைக் கூற வேண்டியவன யிருக்கிறேன்) நான் பிரக்ஞை யற்று மூர்ச்சையானேன். இவ்வாறு எத்தனை காலம் நான் மூர்ச்சையா யிருந்தேனே எனக்குத்தெரியாது; திடீரென்று என் தலைக்கு கோாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/31&oldid=727324" இலிருந்து மீள்விக்கப்பட்டது