பக்கம்:Mixture.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்மாண்ட் டப்புவின் உலகப் பிரயாணங்கள் 27 ஒரு பெரிய பீரங்கியையும் தயார் செய்து வைத்திருந்தார். 1799 டிப்பு சுல்தான் நினைத்தபடியே இங்கிலிஷ்காரர்கள் சீரங்கபட்ட ணத்தை முற்றுகை போட்டனர். அச்சமயம் என் வீரத்தையும் சூட்சும புத்தியையும் அறிந்த இங்கிலிஷ் சேனதிபதி என்னேத் தன் துணையாக அழைத்துச் சென்ருர் இவ்வளவு பலமாகக் கட் டப்பட்ட கோட்டையை நாம் எப்படி பிடிப்பது என்று ஒருநாள் என்னே யோசனை கேட்டார். அப்பொழுது அக்கோட்டையிலுள்ள ஆயிரம் பெயரை ஒரே விசையில் கொல்லத்தக்க பீரங்கியை முத லில் அழிக்கவேண்டும் என்று அவரிடம் சொல்லி, அன்று காலே நான் என் துார கிருஷ்டியால் பார்த்த பொழுது, அதைச் சுடுவதற் காக ஏற்பாடுகளை எதிரிகள் செய்து கொண்டிருந்ததை அறிந்த நசன், ஒரு யுக்தி செய்தேன். எங்களிடமுள்ள பெரிய பீரங்கி யொன் றைக் கொண்டுவரச் சொல்லி, அதை எங்கள் பாசறையில் ஒரு பக்க மாக ரகசியமாக சீரங்கபட்டணத்து அற்புதமான பீரங்கிக் கெதி ரில் வைத்தேன். பிறகு எதிரிகள் அவர்களுடைய பீரங்கிக்கு மரு ங்தை கெட்டித்துக்கொண்டிருந்ததை என் துர கிருஷ்டியால் அறி ந்து, நோாகக் குறிபார்த்து,என் பீரங்கியை அவர்களது பீரங்கிக் குழாய்க்கு எதிராகச் சுட்டேன். உடனே என் பீரங்கியின் குண்டா னது, எதிரிகள் பீாங்கியின் குழாய் வாயில் தழைத்து, அதில் அடைத்திருந்த மருந்தை வெடிக்கச் செய்தது. உடனே பல வருஷங்களாகத் தயார் செய்து வைத்திருந்த தங்கள் பெரும் பீரங்கி சின்ன பின்னமாய் உடைந்து போகவே, அங்கிருந்த சுல்தா னது படைவீரர்களெல்லாம் பயந்து போய் தான்கு பக்கமும் ஒடிப் போய்விட்டனர். இச்செய்தியை யறிந்த சுல்தானும் மிகவும் மனக் கலக்கம் கொண்டிருந்தார். இதுதான் சமயம் என்று நான் ஒரு பக்கிரியைப்போல் வேடம் பூண்டு சிங்கப்பட்டணத்துக்குள் நுழைந்து, சுல்தானிருக்குமிடம் போய்ச் சேர்ந்தேன். சுல்தானி டம் சான் ஒரு பெரும் ஜோஸ்யன் என்று தெரிவித்தேன். அவர் என்னேப் பரீட்சிப்பதற்காக, "என் மனதில் ஒரு கவலை யிருக்கிறது, இப்பொழுது, அது இன்னதென்று சொல் பார்ப்போம்” என்ருர். நான் உடனே, "நீர் பலவருடங்களாகக் கஷ்டப்பட்டு தயாரித்து வைத்திருந்த பீரங்கி அகஸ்மாத்தாய் உடைபட்டதல்ை மனக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/34&oldid=727327" இலிருந்து மீள்விக்கப்பட்டது