பக்கம்:Mixture.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கண்டக்டர்கள் கவனிக்க வேண்டிய காரியங்கள் அனுபவங்கள், முதலியனவெல்லாம் ஆராய்ந்தறிந்து, நாடகபாத்தி ாங்களுக்கு நாடகத்தை ஒரு முறை முற்றிலும் படித்துக் காட்டி, மேற்சொன்ன விஷயங்களை யெல்லாம் அவர்களுக்குப் போதிக்க வேண்டும். பிறகு ஒவ்வொரு நாடக பாத்திரத்திற்கும் அவனது பாகத்தைத் தனியாக நடித்துக் காட்ட வேண்டும். பிறகே அவர்களை தங்கள் தங்கள் பாகங்களை குருட்டுப்பாடம் செய்யும்படி கேட்க வேண்டும். இல்லாவிட்டால் இதற்கு முன்பே அவர்கள் தங்கள் பாகங்களே மனனம் செய்ய ஆரம்பித்துவிட்டால், ஏ தாவது குறுக்கு வழியில் பாய்ந்து விட்டார்களாகுல், அவர்களைப் பிறகு திருப்புவது கடினம். இதன்மேல் ஆக்டர்களெல்லாம் தங்கள் தங்கள் பாடங்களைப் படித்த பிறகு, அவர்களே ஒன்ருய்ச் சேர்த்து ஒத்திகை செய்ய வேண்டும். ஒத்திகைகளெல்லாம் சரிவர கடந்த பிறகு, ஒரு தினமாவது, ஆடும்படியான நாடகமேடையின் மீது அவரவர்களு டைய நாடக உடையுடன் முழு ஒத்திகை பார்க்க வேண்டும்; இத குல் பெரும் நன்மையுண்டு. சென்னே டிராமாடிக் ஸொஸைடியார் (Madras Dramatic Society) gious so Fligi or softāna மேடையின் மீது செய்து பாராத ஒரு நாடகமும் ஆடுவதில்லை என்பதை நான் அறிந்துள்ளேன். மறந்துபோன அநேகம் சில்லரை விஷயங்களை யெல்லாம் இதல்ை பூர்த்தி செய்து கொள்ளலாம். இதற்கு முன்பாகவே நாடகத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் இன் னின்ன திரைவேண்டுமென்றும், இன்னின்னவாருக ரங்க ஏற்பாடு air (Scenic arrangements) Griu Gao QQasirpth aziri 3. டரானவர் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இவ்விஷயத்தில் தற்காலம் சாதாரணமாக பல சபைகளில் திரைமுதலியன ஏற்பாடு செய்வதற்காக ஸ்டேஜ் டைரக்டெர்கள் ஏற்பாடு செய்திருக் கிமூர்கள். அப்படியில்லாத சபைகளில், இ தற்காக கண்டக்டர்கள் ஒவ்வொரு சபையிலும் பிரத்தியேகமாய் ஒரு மனிதனே ஏற்பாடு செய்தல் உசிதமாம். கண்டக்டர்கள் நாடக தினத்தில் பலவிஷயங் களைக் கவனிக்க வேண்டிவரும், ஆகவே தாங்களே எல்லா வேலைகளை யும் பார்ப்பதைவிட, - இம்மாதிரியான வேலைகளுக்கெல்லாம் பிரத்தி யேகமாக மனிதர்களை ஏற்பாடு செய்தல் மிகவும் நலமாம். ஒவ்வொரு காட்சிக்கும் இன்னின்ன் திரைவிடவேண்டும், இன்னின்ன ஏற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/43&oldid=727337" இலிருந்து மீள்விக்கப்பட்டது