பக்கம்:Mixture.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டக்டர்கள் கவனிக்க வேண்டிய காரியங்கள் 37 பாடுகள் செய்ய வேண்டும், இன்னின்ன வாருக அலங்காரங்கள் செய்யவேண்டும், என்பதைக் காகிதங்களில் எழுதி அவர்களிடம் கொடுத்து, அவர்கள் அவற்றையெல்லாம் ஒரு முறை ஒத்திகை செய்து பார்க்கச் சொல்லிவிட்டால், நாடகதினத்தில் இந்த ஏற்பாடு களெல்லாம், தடங்கலின்றி காலதாமதமின்றி, சுலபம்ாய் நடை பெறும். மேற்சொன்னபடியே நாடக பாத்திரங்கள் அணியவேண்டிய உடைகளைப் பற்றியும், இன்னின்ன பாத்திரம் இன்னின்னபடி வேஷம் தரிக்க வேண்டும் என்று கண்டக்டர்கள் முன்பே தீர் மானித்து, இதைப்பார்க்க மற்ருெரு மனிதனே ஏற்பாடு செய்து இந்த வேலையை அவனிடம் ஒப்புவித்தால் மிகவும் சவுகர்யமாம். அநேக சபைகளில் தற்காலம் இதற்காக கிரீன் ரூம் டைரெக்டர்கள் (Green Room Directors) என்று எற்படுத்தப் பட்டிருக்கிறது; இது மற்ற சபைகளும் அனுசரிக்கத் தக்க வழக்கமாகும். இச்சந்தர்ப்பத்தில் கண்டக்டர்களாயிருந்து ஒரு நாடகத்தை நடத்துபவர்கள், தாங்களே நாடகத்தில் முக்கிய வேஷம் தரித்தல் நலமா அல்லவா என்றும் ஒரு கேள்வி பிறக்கிறது. நான் இந்த நாற் பத்தேழு வருடங்களாக நான் கண்டக்டாயிருந்த நாடகங்களில் பெரும்பாலும் நானே முக்கிய நாடகபாத்திரமாக (Hero) நடித்த போதிலும், என் ஆழ்ந்த அபிப்பிராய மென்னவென்முல், அவ் வாறு செய்வது மிகவும் கடினம், கண்டக்டாாயிருப்பவன் நாடகத் தில் ஆடாமல் எல்லாவற்றையும் மேல் விசாானே செய்வதே உசிதம், என்பதாம். இரண்டு வேலைகளையும் ஒருவனே பார்த்தல் மிகவும் -- அன்றியும் கண்டக்டரா யிருப்பவன் சாதாரணமாக ாேடகத்தில் பெரிய பாகம் எடுத்துக் கொள்ளாதிருப்பதினுல் இன் ைெரு பலன் உண்டு; பல நாடகங்களில் நாடகதினத்தில், ஏதோ அசெளகர்யத்தால் யாராவது ஆக்டர் வராமலிருப்பதுண்டு; அப்ப டிப்பட்டசமயங்களிலெல்லாம், அதற்காக ஆட்டத்தை நிறுத்தாமல், கண்டக்டராயிருப்பவன் கடைசி நிமிஷத்தில் அவ்வேடத்தைத் தான் பூண்டு நாடகத்தை நிறைவேற்றுவதே மிகவும் உசிதமாம். ஆகவே கண்டக்டாா யிருப்பவன் திடீரென்று ஒரு நாடகத்தில் எந்த வேடமும் எடுத்துக்கொள்ள சக்திவாய்ந்தவன யிருத்தல் மிகவும் அனுகூலமாம். *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/44&oldid=727338" இலிருந்து மீள்விக்கப்பட்டது