பக்கம்:Mixture.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டக்டர்கள் கவனிக்க வேண்டிய காரியங்கள் 41. வெவ்வேருன வெளிச்சங்கள் ஏற்படுத்த வேண்டு மென்பதை கவ னிக்கும் சபைகள் மிகவும் சிலவென்றே சொல்ல வேண்டும். இவ் விஷயத்தில் எங்கள் சபையும் மிகவும் பின்னிட்டுத்தான் இருந்தது; சுமார் பன்னிரண்டு வருடங்களுக்கு முன் நான் பெளத்தாவதாாம்” என்னும் நாடகத்தை நடத்திய பொழுது, சென்னே டிராமாடிக் சொசைடியின் அங்கத்தினராகிய என் நண்பர் லெஸ்லி கோல்ஸ் (Leslie Coles) என்பவரையும் அவரது மனைவியையும் அங்நாடகத் திற்கு வரவழைத்திருந்தேன்; நாடகம் முடிந்த பிறகு நாடகத்தைப் பற்றி அவரது அபிப்பிராயத்தைக் கேட்க, அவர் மற்றெல்லாம் சரியாகத்தானிருந்தது, உங்களுக்கு ரங்கத்தில், வெளிச்சம் ஏற்பாடு செய்வது அதிகமாகத் தெரியாது போலும் ; ஒரு காட்சியில் தவிர மற்றக் காட்சிகளிலெல்லாம் இதை நீங்கள் கவனிக்கவேயில்லை” என்று ஸ்பஷ்டமாய் எடுத்துரைத்தார். இதன் பிறகுதான் காட்சிகளுக்குத் தக்கபடி வெளிச்சம் ஏற்படுத்த வேண்டிய விஷயத்தைக் கவனிக்க ஆரம்பித்தேன். ஆங்கில நாட கங்களில் இது மிக வும் கவனிக்கப்படுகிறது ; இதற்கென்றே லேட்டிங் மான் (Lighting man) என்று ஒருவன ஏற்படுத்தி ஒவ் வொரு காட்சிக்கும் தக்கபடி வெளிச்சம் ஏற்பாடு செய்கிருர்கள். சில காட்சிகளில், இருண்டிருந்து சக்திரோதயமாக மாறும்படி நாட காசிரியர் ஏற்படுத்தி யிருப்பார், அல்லது காட்சியின் மத்தியில் சூரியாஸ்தமனமாகலாம், அல்லது சூரியோதய காலமாயிருக்கலாம், இவற்றிற்கெல்லாம் தக்கபடி ரங்கவெளிச்சங்களை கண்டக்டர்கள் ஏற்பாடு செய்யவேண்டியது மிகவும் முக்கியமாம். இவ்விஷயத் தில் தமிழ் நாடக மேடையானது ஆங்கிலர்களிடமிருந்து கற்க வேண்டியது அதிகமிருக்கின்றது. - நாடகமேடை வெளிச்ச ஏற்பாடுகளைப் பற்றி எழுதும் பொழுது, தற்காலத்தில் எல்லா தமிழ்நாடக மேடைகளிலும் மிக வும் சாதாரணமாக உபயோகிக்கப்பட்டுவரும் லைம்லைட் (Lime light) என்பதைப்பற்றி என். அபிப்பிராயத்தை எழுத விரும்பு கிறேன். o இந்த லைம்லைட் என்பது இங்கிலிஷ்காரரிடமிருந்து நாம் கற்றுக்கொண்டதாம். நாற்பது வருடங்களுக்கு முன்பாக இது 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/48&oldid=727342" இலிருந்து மீள்விக்கப்பட்டது