பக்கம்:Mixture.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தற்கால நாடக சபைகளை அபிவிர்த்தி செய்வதெப்படி? தற்காலம் தென் இந்தியாவில் pவனத்ாரமாக நாடகம்ாடும் ச்பைகளில் உள்ள சில் குற்றங்களை எடுத்துக்காட்டி அவைகளை அகற்றி நாடகசபைகளே அபிவிர்த்தி செய்வதெப்படி என்பதைப் பற்றி இனி.எழுத விரும்புகிறேன். இப்படி நான் செய்வது அக் குற் றங்களையெல்லாம் நமது கற்றறிந்த நாடகாபிமானிகள் கிவர்த்திக்கும் பொருட்டே யன்றி, விணுகக் குறை கூறும் பொருட்டன்று யென் பதை இதை வாசிக்கும் எனது நண்பர்கள் மதிப்பார்களாக. நான் எடுத்துக் காட்டப் போகிற சில குற்றங்கள், ஆமெட்ர்ே (Amateur) சபைகளிலும் இருக்கின்றன. அவைகளும் இவற்றை விலக்க வேண்டியே, இவற்றைக் குறித்து எழுதுகிறேன். - முதலாவது, பெரும்பாலும் இச்சபைகளிலெல்லாம் நாடகம் குறித்த மணிக்கு ஆரம்பிப்பதில்லை; 93 மணிக்கு நாடக ஆரம்பம் என்று விளம்பரம் செய்திருந்தால், பெரும்பாலும் 10 மணிக்குள் ளாக ஆரம்பித்தால் வந்திருப்பவர்களுடைய அதிர்ஷ்டமாகும்! சாயங்காலம் 5; மணிக்கு ஆரம்பம் என்று பிரசுரம் செய்திருந்தால், 6 மணிக்கு முன்பாக ஆரம்பிப்பது மிகவும் அபூர்வமாகும். ஆமெட்ர்ே (amateur) சபைகளில் இக்குறை சாதாரணமாகக் கிடையாது. இக்குறையை முற்றிலும் ஒழித்து நமது நாடக சபை கள் சீர்திருத்தம் பெறும்படிப் பிரார்த்திக்கின்றேன். இரண்டாவது குறை, நாட்க கம்பெனிகளில் பெரும்பாலும் ஆக்டர்கள் வேஷத்திற்குத் தக்க உடையைத் தரிப்பதில்லை. அயன் ராஜ்ப்ார்ட் ஆக்டர்கள் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கும் பேர்களுள் பலர், கம்பீரமான ஒன்றிரண்டு சம்கி அல்லது சரிகை உடுப்புக்களை வைத்துக் கொண்டிருக்கிருர்கள்; அவர்கள் எந்த வேஷம் ஆண்டாலும் அந்த உடுப்புகளை உடுத்திக் கொண்டு மேடை யின் மீது தோன்ற வேண்டியதுதான்! சுப்பிரமணியராக வந்தாலும் அதே உடுப்பு வேடனய் வந்தாலும் கோவலனுய் வந்தாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/51&oldid=727346" இலிருந்து மீள்விக்கப்பட்டது