பக்கம்:Mixture.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தற்கால நாடக சபைகளை அபிவிர்த்தி செய்வதெப்படி ? சில ஆபாசங்கள் இருக்கின்றன. பெரிய சங்கீத வித்வான்கள், நாடக மேடையில் வேடம் பூ ண் டு வரும் பொழுது, பாடும் மார்க்கம் பெரும்பாலும் அடியில் வருமாருகும் உள்ளே யிருந்து பாடிக்கொண்டுவந்தாலும் சரி, அல்லது மேடைக்கு வந்த பின் பாட ஆரம்பித்தாலும் சரி, உடனே நேராக ஹார் மோனியம் பெட்டி வைத்திருக்கும் பக்கம் போய் கின்று கொண்டு, அல்லது அப்பெட்டியின் மீது ைக ைய வைத்துக் கொண்டு, சபையோரைப் பார்த்துப் பாடுவார்கள். முதலாவது இந்த ஹார்மோனியம் பெட்டியை மேடையின் மீது வைப்பதே தவ ருகும். மேடையில் கடக்கும் காட்சி ஏதாயிருந்தாலும் சரி, கானக மாயிருந்தாலும் சரி, விதியாயிருந்தாலும் சரி, சமுத்திரமாயிருந் தாலும் சரி, கோயிலா யிருந்தாலும் சரி, ஸ்மசானமாயிருந்தாலும் சரி, அதன் மத்தியில் இந்த ஹார்மோனியப் பெட்டி எல்லோரு மறிய விளங்கும் இந்த ஹார்மோனியம் பெட்டி யிருக்க வேண்டிய இடம், ரங்கத்தின் பின்பக்கத்தில், காழ்ந்த இடத்தில்-என்று கான் உறுதியாய்க் கூறக்கூடும் ஐரோப்பா முதலிய எந்த கண்டத் திலும், எந்த தேசத்திலும், இந்த ஹார்மோனியப் பெட்டியை இவ்வாறு பயிரங்கமாய் சங்கத்தில் வைக்கும் வழக்கம் கிடையாது என்று உறுதியாய்க் கூறலாம். மேற்சொன்னபடி சங்கத்தின் முன் பாக தாழ்ந்த இடத்தில் வைக்க வசதி யில்லாவிட்டால், மேடை பின் பேரில், சைட்படுகாக்கள் இருக்குமிடத்தில் மறைத்து வைப் பதே தகுதியாம் பாடும் ஆக்டருடைய சங்கீதக்கிற்கு இது துணைக் கருவியாயிருக்க வேண்டுமே யொழிய முதற் கருவியாயிருக்கலா காது; இப்படி ஹார்மோனியம் பெட்டி ம்ேடையின் மீது வைக்கப் படுவதற்கு முக்கியகாரணங்கள் இரண்டாயிருக்கலாம். ஒன்று, பாடும் ஆக்டர்களுக்கு சுருதி எடுப்பதற்கு சுலபமாயிருக்கலாம்; இாண்டு, இந்த ஹார்மோனியம் பெட்டியை வாசிக்கும் சங்கீத வித்வான் திறமையை சபையோர் அறியவேண்டும் என்றிருக்கலாம். எதுவாயிருந்தாலும் இதற்காக ரங்கத்தின் ஒழுங்கைக் கெடுப்பது மிகவும் வியசனிக்கத் தக்கதே. எதோ பாடும் ஆக்டர்களுடைய சங்கீதத்திற்கு அனுசரணையா யிருக்கிறதென ரங்கத்தின் மீதே இப்பெட்டியை வைத்த போதிலும், நடிக்கும் ஆக்டர் அதனருகில் நின்று கொண்டும் அதன் பேரில் கையை வைத்துக் கொண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/55&oldid=727350" இலிருந்து மீள்விக்கப்பட்டது