பக்கம்:Mixture.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. தற்கால நாடக சபைகள அபிவிர்த்தி செய்வதெப்படி? புதிய நாடகங்களையும் ஆடத் தலைப்படுவார்களாயின் தென்னிந்தியா விலுள்ள தமிழ் நாடக மேடை சீக்கிரத்தில் உன்னத ஸ்கிதியை ய்டையுமென்பதே. மேற் சொன்னபடி பழய நாடகங்களையே ஆடுவதிலும் அவை களை மனம்போனபடி யெல்லாம் இக்கம்பெனிகள் மாற்றி ஆடுவது மற்ருெரு நிவர்த்திக்க வேண்டிய குறையாம். இதற்கு ஒரு உதா ாணமாக கோவலன் சரித்திரத்தை எடுத்துக் கொள்ளுகிறேன். இது சிலப்பதிகாரம் என்னும் ஐம்பெரும் ஜைன காப்பியக் கதை யாகும். இதன் நாலாசிரியர் எழுதியபடி கதையானது மிகச் சிறந்த தாகும். அதை யெல்லாம் முற்றிலும் மாற்றி இப்பொழுது மிகவும் ஆபாசமாக ஆடப்பட்டு வருகிறது. சில நாடக கம்பெனிகள் 'கோவலன்” எனும் கதாநாயகனுடைய பெயரையும் சரியாக அறி யாது கோவிலன்” என்று அச்சடித்து விடுகிரு.ர்கள்! இக்காட கத்தை ஒரு முறை பார்க்கவேண்டுமென்று ஒரு கண்பாால் அழைத்துக்கொண்டுபோகப்பட்ட நமது நல்லாசிரியர் மஹா மஹோ பாத்யாயர் டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் முதல் ஒன். றிாண்டு காட்சிகளைப் பார்த்தவுடன் பூர்வீக கதையானது மிகவும் மாற்றப்பட்டதைக் கண்டு மனம் பொருதவராய், நாடகசாலையை விட்டு விட்டுத் திரும்பி வந்தனர் என்பதை நான் அறிவேன். தற்காலம் நாடக கம்பெனிகளால் ஆடப்படும் இக்கதையின் ஒர் காட்சியில், ஓர் பெண் விக்கிாஹமானது ஒரு துடப்பக்கட்டையால் கதாநாயகனே அடிப்பதுபோல் காட்டப்படுகிறது! சிலப்பதிகார நூலாசிரியாது அருவம் அதைக் காணுமாயின் கண்ணீர் விட்டி ருக்குமென்பது கிண்ணம். அன்றியும் கதா நாயகி காளியாக வரும் காட்சிகள் பூர்வகதைக்கு மிகவும் மாறுபட்டனவாம்.தற் காலத்தில் கடிக்கப்படும் இக்கதையைச் சீர்திருத்த வேண்டிய குற்றங்களை எடுத் துக் கூறுவதென்ருல் மணல் சோற்றில் கல் பொறக்குவதொக்கும். மேற் சொன்னபடியே, தாராசசாங்கம், குசலவ நாடகம், முதலியன் வைகளிலும் புராதனமான கதைகளிலில்லாத சில ஆபாசங்களை துழைத்திருக்கின்றனர். இனிமேலாவது நாடக கம்பெனிகள் புராணி இதிகாச கதைகளே. ஆடும்பொழுதும், பூர்வீக காவியங் களை நாடக ரூபமாக ஆடும் பொழுதும், புதிய ஆபாசங்களை அவை களுடன் சேர்க்காது இடத்துவார்களெனக் கோருகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/59&oldid=727354" இலிருந்து மீள்விக்கப்பட்டது