பக்கம்:Mixture.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தற்கால நாடக சபைகளே அபிவிர்த்தி செய்வதெப்படி 55 சிட்ட புஸ்தகங்களிலிருந்தாவது, அல்லது, முன்னதாக அவற்றை எழுதிப் பாடம் செய்து ஒத்திகை செய்து பார்த்தாவது பிறகே நாடக மேடையின் மீது அவ்வசனங்களை உபயோகிப்பார்களாக. நாடக கம்பெனிகளிலிருந்து ஒழிக்கவேண்டிய மற்றெரு கெட்ட வழக்கம் என்னவென்முல், பின்பாட்டு என்பதாம்-அதா வது சங்கத்தின் மீதிலுள்ள ஆக்டர் ஒரு பாட்டில் ஒரு அடியைப் பாடி முடித்தவுடன், சைட் படுதாக்களிருக்குமிடமிருந்து, மற்றவர் கள், பாடின அடியை மறுபடியும் பாடுவதேயாம். இது பூர்வீக காலத்தில் எதோ சில காரணங்களால் சற்று பொறுத்தமானதா யிருந்த போதிலும், தற்கால நாகரீகத்திற்கு ஒத்ததன்று. இதல்ை நான் அறிந்த வரையில் ஒரு லாபம்தான் உண்டு, அதாவது ஒரு ஆக்டர் தான் பாட வேண்டிய பாட்டில் ஒரு அடியைப் பாடியான வுடன், பின்பாட்டு ஆரம்பித்தால், அந்த ஆக்டர் சற்று சிரமபரிகாா மாய் மேடையின் மீது ஒன்றும் செய்யாமல் கிற்கலாம். இதலுைண் டாகும் ரசாபாசங்கள் பல, அவற்றுள் சில வற்றை மாத்திரம் இங்கு எடுத்து எழுதுகிறேன். முதலாவது, பின்பாட்டுப் பாடப்படும் பொ ழுது, சங்கத்திலிருக்கும் ஆக்டர் சும்மா விழித்துக் கொண் டிருக்க வேண்டி வருகிறது; அன்றேல் முகம் கை, முதலியவற் முல் ஆங்கிலத்தில் LTã@-remiotł(Pantomime)sforzwä அபிநயம் பிடிக்கவேண்டி வருகிறது; ஒரே வாக்கியத்திற்கு, இரண்டு தாம் அபிநயம் பிடிக்கவேண்டியவனகிருன்; செய்ததையே செய்யாது, இரண்டுவிதமாக அபிநயம் பிடிக்கத்தக்கவர்கள் சிலரே. இதைவிட மேலான கஷ்டமென்னவெனில், பின்பாட்டுக் காான் சங்கீதத்தில் சிறிக்கவனுயிருந்தால், ஆக்டர் மேடையின்மீது போடும் சங்ககிகளை விட, இவன் அதிக சங்கதிகள் போட்டு பாட ஆரம்பித்துவிடுவான்; அல்லது இருவரும் சங்கேவித்வான்களாயிருந்தால், சங்கதிகள் போட்டு பாடுவதில் போட்டா போட்டியாய் முடியும் இது சங்கீதப் பிரியர்களுக்கு கொஞ்சம் வினுேதத்தைத் தந்தபோதிலும் நாடகாபிமானிகளுக்கு மனே வருத்தத்தை யுண்டுபண்ணு மென் பதற்குத் தடையில்லை. சங்கிதக் கச்சேரியில் இரண்டு சங்கீத வித் வான்கள் பல்லவி பாடுவதில் போட்டி போடுவது போலிருக்குமே யொழிய, கேவலம் நாடகமேடைக்குப் பொறுத்தமானதன்று,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/62&oldid=727358" இலிருந்து மீள்விக்கப்பட்டது