பக்கம்:Mixture.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்மாண்ட் டப்புவின் உலகப் பிரயாணங்கள் விட்டு, களைப்புற்றவனுய், அதிக நாழிகை பொறுத்து உணவை உண்டு விட்டு திக்கரையோரமாக உறங்கினேன். சற்று நேரம் பொறுத்துக் கண் விழித்துப்பார்க்க, சாயங்காலமாய் விட்டது. இவ்வளவு நோம் துங்கிவிட்டோமே அரசர் ஏதாவது கோபங் கொள்வாரே என்றும் கவலையுடன் எழுந்திருக்க முயலும் பொழுது, சற்று தூரத்தில் உயரமாக வளர்ந்திருக்க நாணற்கோரையின் பக் கம் சலசல வென்று ஒரு சப்தம் என் காதிற் பட்டது. என்ன வென்று திரும்பிப்பார்க்க ஒரு சிங்கத்தைக் கண்டேன்' என் ஆச்சரி யத்தை என்னென்று சொல்லுவேன்! என் கையிலோ ஒரு ஆயுத முமில்லை. சாயங்காலத்தில் அதன் இரு கண்களும் இாண்டு பெரிய நெருப்புப்பொறிகள்போல் என் கண்ணுக்குப் புலப்பட்டன. பசித் திருக்கும் அச்சிங்கத்திற்கு ஆகாரமாக அதன் வயிற்றில் நான் சிக்கிரம் வாசம் பண்ேைவண்டியதுதான் என்று தீர்மானித்தேன். ஆயினும் என் தைரியத்தை மாத்திரம் நான் கைவிடவில்லே. அச்சிங்கத்திற்கு நான் இாையாவதானுலும் ஒரு கை பார்த்துவிட்டுத் தான் பிறகு அக் கதியை அடையவேண்டுமென்று திர்மானித்தவனுய், நான் என் சொக்காயின் கைகளைத் தள்ளிக்கொண்டு அதை எதிர்க்க விாைந்து காலடி வைத்தேன்; இதற்குள் அச்சிங்கமானது என் மீது பாய யத்தனித்தது. அச்சமயம் என் துர் அதிர்ஷ்டத்தினலோ, அல் லது என் அதிர்ஷ்டத்தினலோ, அங்கிருந்த ஒரு கல் தடுக்கி பொத்! என்று கீழே விழுக்தேன். அட்சணம் என் மீது பாய்ந்த சிங்க மானது, தான் கீழே விழுந்ததினல் தன் குறி கப்பி, என் உடலின் மீது பாய்ந்து சென்றது. ஒரு கடினத்திற்கெல்லாம் என் பின் புதிமாக, (நதியின் பக்கமாக) சிங்கமானது கர்ஜிப்பதை விட்டு, ஏதோ துயரமடைந்ததுபோல் சப்திக்க ஆரம்பித்தது, என்னடா என்று கிரும்பிப் பார்த்தால், மிகவும் ஆச்சரியகரமான ஒரு காட்சி யைக்கண்டேன்! பிறகு நான் ஊகித்தறிந்தபடி, நான் நதியோாம் கின்றுகொண்டிருந்த பொழுது அதன் காையிலிருந்த ஒரு பெரிய முதலையானது என்னே விழுங்க வாயைத் கிறந்து கொண்டு வந்து கொண்டிருக்கவேண்டும்; இதற்குள்ளாக சிங்கத்தைக் கண்டு ಹTir திரும்பி அதனே எதிர்க்கப் போனபோது அம் முதலை பின்னுல் என் னேத் தொடர்ந்து வந்திருக்கவேண்டும்;. சிங்கமானது தன் குறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/8&oldid=727377" இலிருந்து மீள்விக்கப்பட்டது