பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i{)6 நாடகமேடை நினைவுகள் ஆயினும் எல்லோரையும் விட இந்நாடகத்தில் சபையோரைச் சந்தோஷிக்கச் செய்தவர், பப்பான் வேடம் பூண்ட எம். துரை சமி ஐயங்காசே அவர் ாங்கத்தில் தோன்றும் பொழுதெல்லாம் விடாத நகைப்பை உண்டாக்கினர். இந்த நாடகத்தில்தான் என் ஆருயிர் நண்பராயிருந்த சி. ரங்கவடிவேலு முதலியார் முதல் முதல் எங்கள் சபையில், வேடம் பூண்டனர். அன்று முதல், தன் மாண்பர்யங் தம், உட லும் கிழலும்போல் என்னேப் பிரியாதிருந்து என்னுடன் ஏறக் குறைய எல்லா நாடகங்களிலும் என் மனேவியாக நடித்த இவ ரைப்பற்றிச் சற்று விரிவாக எழுத வேண்டியது என் முக்கிய கடமையாகக் கொண்டு, அவரைப்பற்றி இனி எழுதுகிறேன். b மேலே வரைந்துள்ள வாக்கியத்தை எழுதி இன்று நான்கு நாட்களாயின; இந்த நான்கு தினங்களாக, எனது நண்பரைப் பற்றி கான் எழுத வேண்டியதைப் பன்முறை எழுதப் பிரயத்தி னப்பட்டும், என்மனமும், கண்களும், கையும், சோர்ந்தவனுய், அங்கனம் செய்ய அசக்தனுயிருக்தேன். இன்றே திருவருளை முன்னிட்டு, என் மனதை ஒருவாறு திடம் செய்து கொண்டு எழுத ஆரம்பித்தேன். எல்லாம்வல்ல கடவுள், நான் இழந்த என்னுயிர் கேயனுக்குச் செய்யவேண்டிய கடமையை பத்தி லொரு பங்காவது செய்து முடிக்க எனக்கு மனேகிடமளிப்பா | 姆”瘟”岛测 இந்த ஜன்மத்தில் ஈசன் தன் கருணையினுல் எனக்களித்த பெரும் பேறுகள் மூன்றைச் சொல்லும்படியாக யாராவது என் னேக் கேட்பார்களாயின், கூனமும் தாமதியாமல், என் தாய், என் ಸ್ಟ್ರಕ್ಷಣ,,, எனது நண்பன், இம்மூன்று தான், என்று பதில் உரைப்பேன். இதை வாசிக்கும் எனது இளைய நண்பர்களுள் சிலர், நாங்களிருவரும் எவ்வளவு அன்யோன்யமாய் ஏறக் குறைய இருபத்தெட்டு வருஷம் வாழ்ந்து வந்தோம் என்பதை அறிந்திருக்கலாம். அதை அறியாத மற்றவர்களுக்கு, ஷேக்ஸ் பியர் மஹாகவி, ஆஸ் யுலைக் இட் (As you Like it')என்னும் நாடகத்தில் இணே பிரியா தாயாதிகளாகிய, ராசலிண்ட், சிலியா,

  • - * • so ♔ w - - -

என்பவர்களைப்பற்றி எழுதியதை இங்கு எழுத விரும்புகிறேன். அங்காடகத்தில் முதல் அங்கம் மூன்ருவது காட்சியில் சிலியா, தங்களிருவருடைய க.பைப்பற்றிக் கூறும்பொழுது ஒரே காலத்தில் காங்கள் எப்பொழுதும் உறங்கிளுேம், ஒரே காலத்தில் எழுத்திருந்தோம். ஒரே காலத்தில் விளையாடினுேம். ஒரே காலத்தில், படித்தோம், நாங்கள் எங்கு சென்ற போதிலும்,