பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகன: வேறுவகை யொன்றும் காணுதவளுய், மானியர் வில்லியம்ஸ் (Monier Williams) என்பவர் சம்ஸ்கிருதத்திலிருந்து ஆங்கி லத்தில் மொழிபெயர்த்த சகுந்தலா’ என்னும் நாடகத்தைத் தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருக்தேன். இந்த வெங்க்ட்கிருஷ்ண நாயுடு என்பவர் எனது பால்ய சிநேகிதர்; அவர் குடும்பத்தாரும் என் குடும்பத்தாரும் மதுரையிலிருக்க பொழுது மிகவும் அந்யோக்யமாகப் பழகினவர்கள் ; ஆகவே இவருக்குத் தமிழ் நாடகங்களின்மீது எனக்கிருந்த வெறுப்பு என்ருய்த்தெரியும். அதனுல் அவர் பல்லாரி சரசவினுேத சபை ன்யப்போல் சென்னையில் ஒரு காடக சபை ஸ்தாபிக்கவேண்டி ஒரு சபை கூடப்படும் ஒன்று அச்சடித்த அறிக்கைப் பத்திரி தேக்களே எனது இரண்டு மூத்த சகோதரர்களுக்குக் கொடுத் க்கர்; நீ இதையெல்லாம் ஏளனம் செய்வாய் ' என்று கூறி எனக்குக் கொடுக்கமாட்டேன் என்று மறுத்தார். இவ்விஷயத் தைக் கேள்விப்பட்ட நான், பணத்தைத்தேடிச் செல்லவேண்டு மென்று தீர்மானித்திருந்த ஒருவனுக்கு, அவன் வீட்டிலேயே பெரும் நிதிகிடைத்ததுபோல், சந்தோஷப்பட்டு, எனக்கும் ஒரு அறிக்கைப் பத்திரிகையை கொடுக்க வேண்டுமென்று கேட்டேன். நீ அக்கூட்டத்திற்கு வந்த ஏதாவது குறும் பாய்ப் பேசுவாய், உன்னே அழைக்கமாட்டேன், ' என்று பதில் உரைத்தார். (அக்குறும்புகுணம் இன்னும் என்னே விட்டு முற்றிலும் அகலவில்லை என்றே எண்ணுகிறேன்.) அதன் மீது நானும் அப்படிப்பட்ட சபையொன்று ஏற்படுத்த உத்தேசங் கொண்டிருந்ததைத் தெரிவித்து, அதை மெய்ப்பிக்கவேண்டி, நான் தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்த சகுந்தலா? நாட்கத்தையும் காண்பித்தேன். அதனுலும் அவர் சந்தேகம் நீங்கினவர் அன்று. அக்கூட்டத்திற்கு வந்து ஒன்றும் விரோ தம ய் ன் பேசலாகாதென உறுதிமொழிவாங்கிக் கொண்ட பிறகுதான் என்னேயும் அக்கூட்டத்திற்கு வரும்படி அழைத் தார். பிறகு அக்கூட்டத்திற்கு நான் போயிருந்தேன். அக்கூட்டம் சென்னேயில் மண்ணடிக்கடுத்த ஒரு விதியில், அக்காலத்தில் ஜாக்கியஸ் (Zacheus) பள்ளிக்கூடம் என்ற பெயரை உடைத்தாயிருந்த ஒரு பள்ளிக்கூடத்தின் கட்டிடத்தில் நடை பெற்றது. சுமார் முப்பது அல்லது காற்பது பெயர்தான் வந்திருக்கார்கள். கூட்டம் ஆாம்பிக்கப்படுமுன், அன்றுதான் முதல் முறை, அக்காள் முதல் இக்காள்வ ைஎனது நண்பரா யிருக்கும், த. ஜெயராம நாயகரைக் கண்டேன். எங்கள் பொது நண்பராகிய வெங்கடகிருஷ்ண நாயுடு, எங்களிருவரையும், ஒரு வருக்கொருவர் இன்னுரெனத் தெரிவித்தார். கூட்டத்திற்கு 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/14&oldid=727422" இலிருந்து மீள்விக்கப்பட்டது