பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 நாடகமேடை நினைவுகள் அக்கிராசனதிபதியாக மாாது (தற்காலம் திவான் பஹதூர் என்கிற கெளரவப்பட்டம் பெற்ற,) பி. எம். சிவஞான முதலியார் பி. ஏ. பி. எல்., விற்றிருந்தார். அமிர்தலிங்கம் பிள்ளை பி. ஏ. என்பவரும், இன்னும் ஒன்றிரண்டு பெயர்களும் ஆங்கிலத்தில், @ಕ್ಷಪTಿಸು சரசவிைேத சபையைப்போன்ற கற்றறித்தவர் கள் சேரக்கூடிய நாடக சபை ஒன்று உண்டாக்க வேண்டும் என்கிற விஷயத்தைப்பற்றிப் பேசினர்கள். அன்று அக்கூட்டத் தில் பேசியவிஷயங்கள் ஒன்றைத் தவிர மற்றவை, எனக்கு இப் பொழுது ஞாபகத்திலில்லை. எனக்கு இப்பொழுது முக்கிய்ம்ாக ஞாபகத்திலிருப்ப தென்ன வென்ருல், அக்கிசாசனம் வகித், முதலியார் அவர்கள், சிறுவர்களாகிய நீங்கள் இப்படிப்பட்ட சபையை ஸ்தாபிக்கக் கூடாதென்று எடுத்துப் பேசியதே! 'இளங்கன்று பயம் அறியாது’ என்னும் பழமொழிக் கிணங்க அந்த உபதேசமானது எங்கள் செவியிற்புகவில்லை. கூட்டத்தின், முடிவில் யார் யார் இப்படிப்பட்ட சபையை ஸ்தாபிக்க இஷ்ட முடையவர்களாயிருக்கிருர்களோ, அவர்களெல்லாம் மேஜையின் பேரில் வைத்திருக்கும் காகிதத்தில் கையொப்ப மிடலாம் என்று தெரிவிக்கப்பட, எனது நண்பர் ஜெயராம் நாயகர் முதலில் கையொப்ப மிட்டார். எனக்கு ஞாபகமிருக்கிறபடி நான் இரண்டாவது கையொப்ப மிட்டேன். இக் காரணம் பற்றி அன்றுமுதல் இன்றுவரை ஜெயராம் நாயகர் அவர்கள் சுகுண விலாச சபைக்கு முதல் அங்கத்தினராகக் கெளரவப்படுத்தப் பட்டு வருகிருர், - - - மேற்கண்ட கூட்டம் கூடிய இரண்டு மூன்று கினங்களுக் கெல்லாம், 1891u ஜூலைமாதம் முதல் தேதி, மேற்குறித்த விகிதத்தில் கையொப்பமிட்ட எழுவரும் சென்னையில் ஒருநாடக சபை ஸ்தாபிப்பதற்காக தம்பு செட்டி வீதியில் ஜெயராம் நாயக ருடைய தகப்பனர் வீட்டில் ஒரு கூட்டம் கூடிைேம். அன்று அச்சிறு கூட்டத்திற்கு என்னே ஆக்கிாாசனம் வகிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள்; அங்கனமே செய்தேன். அன்று மாலை சுமார் 6-மணிக்கு சென்னேயில் ஒரு நாடக சபை ஸ்தாபிக்க வேண்டுமென்றும், அதற்கு சுகுண விலாச சபை யென்று நாம் தேயம் வைக்கவேண்டுமென்றும் தீர்மானித்தோம். எனக்கு ஞாபகம் இருக்கிறவரையில் சுகுண என்கிற வார்த்தை அப் பெயரில் இருக்கவேண்டுமென்று பிரேசேபித்த வர் ஊ. முத்து மாரசாமி செட்டியார் விலாசம் ' என்ற பதம் அடங்கியி ருக்கவேண்டுமென்று பிரே ரே பித்தவர் சம்பத்து செட்டியார். இக் கூட்டத்தில்தான் முத்து குமாரசாமி செட்டியாரும் வெங்கடகிருஷ்ண பிள்ளை யென்பவரும் எனக்குப் பரிசயமாஞர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/15&oldid=727423" இலிருந்து மீள்விக்கப்பட்டது