பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் łł கள். இக்கூட்டத்தில் முத்துகுமாரசாமி செட்டியார், வெங்கட. கிருஷ்ண நாயுடு, வெங்கடகிருஷ்ண பிள்ளை, ஜெயாாம் நாயகர், கான், ஆகியஐவரும் சபையின் காரியங்களைப் பார்க்க கிர்வாக சபையாக ஏற்படுத்தப் பட்டோம். முத்துகுமாரசாமி செட்டி யார் காரிய தரிசியும் பொக்கிஷதாாருமாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட்ார். இங்கு முக்கியமாகக் கவனிக்கத்தக்க விஷயம் என்ன வென் ருல், சுகுண விலாசசபையை மேற்கண்டபடி ஸ்தாபித்த எழுவரும் பெரும்பாலும் பள்ளிக்கூடங்களில் வாசித்துக் கொண்டிருந்த சிறுவர்கள், அல்லது அப்பொழுதுதான் பள்ளி யை விட்ட சிறுவர்களாயிருந்தோம் என்பதே. முதல் அங்கத்தி னராகிய ஜெயராம் நாயகருக்குச்சுமார் பதினேழு வயதிருக்கும்; பள்ளிக்கூடத்தில் அக்காலத்தில் மெட்ரிகுலேஷன் (Matrictiiation) என்று சொல்லப்பட்ட பரீட்சைக்குக் கிரிஸ்துவ கலா சாலை எனப் பெயர் வ ழ ங் கி ய பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தார்; இவர் பூவிருந்த வல்லியில் டிஸ்டிரிக்ட் முன் சீப் வேலையிலிருந்து பென்ஷன் வாங்கிக்கொண்ட ப-ா.ா-ஆரீ செல்லப்பநாயகர் அவர்களுடைய கடைசி குமாரர். வெங்கடகிருஷ்ண நாயுடு என்பவர் மதுரையில் நட்சத்திாங் களின் கிலையைக் கணிக்கும் ஆபீசில் இருந்த சேஷாசலம் நாயுடு என்பவரின் குமாார். எல். எம். எஸ். என்னும் வயித்தியப் பரீட்சைக்காகச் சென்னையில் வைத்திய கலாசாலையில் படித்துக் கொண்டிருந்தார். வெங்கடகிருஷ்ணப் பிள்ளை என்பவர் ஜெயராம் நாயகருடைய பந்து; முதல் எல். எம். எஸ். பரீட் சையில் அப்பொழுதான் தேறி, இரண்டாவது எல் எம். எஸ். என்னும் வைத்தியப் பரீட்சைக்கு சென்னை வைத்திய கலா சாலையில் படித்துக் கொண்டிருந்தார். முத்துக் குமாரசாமி செட்டியார், அப்பொழுதுதான் பி. ஏ. பரீட்சையில் தேறி, அவர் தகப்பனுர் ஊ. புஷ்பாத செட்டியார் காலஞ்சென்றமையால் அவர் ஸ்தாபித்த கலாாத்ணுகாம் அச்சுக் கூடத்தை மேல் விசாாணே பார்க்க ஆரம்பித்தார். நான், (இப்பதத்தை இல் வியாசங்களில் அடிக்கடி உபயோகிக்க வேண்டி வரும்; இதற்குக் காணம் என் அகம்பாவமன்று; எனது நாடகமேடை நினைவு களைப்பற்றி நான் எழுதப் புகுந்தமையால் இப்பதம் அடிக்கடி உபயோகிக்க வேண்டியது அவசியமாகிறதென எனது நண்பர் கள் குறிப்பார்களாக). அக்காலம், சென்னை பிரசிடென்சி (Presidency) கலாசாலையில் பீ. ஏ. பரீட்சைக்காகப் படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அப்பொழுது வயது 18; என் தகப்பனர் பள்ளிக்கூடங்களுக்கு இன் ஸ்பெக்டர் (inspector) வேலையிலிருந்து, 60 வயதாகிக் கொஞ்ச காலத்திற்கு முன் பென்ஷன் வாங்கிக்கொண்ட டி-ா-ா-பூநீ பம்மல் விஜயாங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/16&oldid=727424" இலிருந்து மீள்விக்கப்பட்டது