பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 நாடகமேடை நினைவுகள் நாடகமாகிய, அப்பாவுபிள்ளை அவர்களால் இயற்றப்பட்ட 'இந்திரசபா' எனும் நாடகத்தில் அயன் ராஜபார்ட் எனும் சந்த லுமகாராஜாவாக நடித்த வசதாாஜலு நாயகர் என்பவர் கையில் ஒரு தாளமும் அவரது சிநேகிதர் ஒருவர் கையில் ஒரு தாள்மும் வைத்துக்கொண்டு, காது செவிடு படும்படியாக தாளமபோட்டுக் கொண்டிருந்தனர்; எல்லாம் பாட்டு மயமாயிருந்தது நான்கு ஐந்து பாட்டிற்கு இடையில் சில வார்த்தைகள் தப்பிப் பிழைத்து வந்தனவோ Tಣ67(ಎ) எனக்கு சந்தேகமாயிருந்தது. வசத ராஜ லு நாயகர் அவர்கள் ஒரு பாட்டில் ஒரு அடி பாடினவுடன், பின் பாட்டாக நான்கு ஐந்து பெயர் அதே அடியை உாக்கப் பாடுவார்கள் இதையெல்லாம் வாய் திறவாது கேட்டுக்கொண் டிருந்த போதிலும், என் மனதில் மாத்திரம் கொஞ்சம் வெறுப்பு தட்டியது. ஷேக்ஸ்பியர் மகாகவியின் சில நாடகங்களைப் படித்திருந்த எனக்கு இந்த இந்திரசபா எனும் நாடகமானது கொஞ்சமேனும் ருசிக்கவேயில்லை. சில ஆங்கிலேய நாடகங் களைப் பார்த்த எனக்கு, இவர்கள் நடிக்கும் விதம் எள்ளள வேனும் பிடிக்கவில்லை. இந்த இந்திாசபா நாடகமானது, தற் காலத்தில் கோவலன் ட க ம் .ெ க ச ஞ் சம் பிரபலமாகி வாரத்திற் கொரு முறையாவது நடிக்கப்படுவது போல், அக்கா லத்தில் பிரபலமாயிருந்து மாதத்திற்கொரு முறையாவது நடிக் கப்பட்டு வந்தது. ஒரே நாடகமானது, கடல் இந்திர சபா, மலை இந்திர சபா, கமல இந்திாசபா, அக்கினி இந்திர சபா எனும் இப்படிப்பட்ட வேறு வேறு பெயர்களுடன் ஆடப்பட்டு வந்தது. இக் கதையிலுள்ள ஆபாசங்களில் ஒன்றை மாத்திசம் இங்கே எடுத்துக் கூறுகிறேன். இக்நாடகத்தில் கதாநாயகன் சந்திரவம்சத்தாசனகிய சக்தனு. இவன் வேட்டையாடி விட்டுக் கானகத்தில் உறங்குங்கால் ஊர்வசி யெனும் அப்சாக் கன்னிகை, இவனைக்கண்டு மோகம் கொள்கிருளாம். இச்சந்தர்ப்பத்தில் சந்தனு எனும் பதத்தை சந்தனம் என்று மாற்றி, ஊர்வசி, கான கத்தில் வந்தவுடன் சந்தனவாடை வீசுகிறதாகத் தெரிவிக்கிருள்! சந்தனு ஊர்வசியால் எழுப்பப்பட்டவுடன், திடீரென்று உண் டான மின்னலைக் கண்டு கண் பொட்டையானவன், பின் தாங்கி கண்களை நிமிட்டிக்கொள்வது போல் அபிநயிப்பார் இது அக் காலத்தில் வயிற்றை வளர்க்க நாடகங்கள் ஆடிவரும் எல்லாக் கம்பெனிகளிலும் சாதாரண வழக்கம் என்பதைப் பிறகுதான் அறிந்தேன். ஒத்திகை ஒருவா எட்டுமணிக் கெல்லாம் முடிந்த வுடன், அங்கிருந்த புதிய அங்கத்தினர்க்கெல்லாம், முத்துகுமா சாமி செட்டியார், ஜெயராம் நாயகர் முதலியவர்களால் தெரிவிக் கப்பட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/23&oldid=727431" இலிருந்து மீள்விக்கப்பட்டது