பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 密丑 ' ' , 榭 佐,鸡岁 * * ی. د " & . . . . _f o : .م. می، امیہ ثما.s ٹہ 'ஆகட்டும்' என்று விம்பாய் ஒப்புக்கொண்டேன். அக்காலத் - * - - :** , - :ج كريست. يم - தில் என்னிடம் அறியாமை எவ்வளவு குடி கொண்டிருந்ததோ, அவ்வளவு வீம்பும் இருந்தது. அன்றிரவு வீட்டி ற்குப்போனவுடன், என்னடா இப்படி அகப்பட்டுக் கொண்டோமே எனறு கவலைப்படலானேன். 'எண்ணித் துணிக கருமம், துணிந்த பின் எண்ணுவம் என் பதிழுக்கு” என்னும் தெய்வப் புலமைத் திருவள்ளுவருடைய திவ்ய வாக்கு ஞரபதம் வந்தது. அதுவரையில் ஒரு தமிழ் நாட கத்தையும் பார்த்திராத கான், எப்படி தமிழில் தாதனமாக நாடகம் எழுதுவது, என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்க எனக்கு ஒரு யுக்தி தோன்றியது. ஆன்திசவு, வழக்கப்படி என் தசுப்பணுருடன் உட்கார்ந்து சாப்பிடும்பொழுது கிர்வாக சபை யில் நடந்ததை யெல்லாம் கூறி, 'இந்த தங்கடத்திற்கு என்ன செய்வது நான்' ಹ್ಯ 575 கேட்டேன். அப்பொழுத என் தந்தை, 'நீ ஏதாவது தமிழ் நாடகத்தை இது ಖಾ!! பார்த் திருக்கி முயா? " என்று கேட்டார். நான் இல்லை என்று பதில்சொல்ல, கொஞ்சம் நகைத்து, சற்று ஆலோசித்து 'காளை சனிக்கிழமை, கோவிந்த சாமிாவ் நாடக கம்பெனியின் ஆட்டத்திற்கு உன்னே அழைத்துப் போகிறேன். இருப்பதற்குள் அவ்விடம் தான் தமிழ் நாடகங்கள் சுமாராக நடிக் ப் படுகின்றன. அதைப் سم பார்த்து நீ கற்றுக்கொள். என்று கூறினர். சொன்ன படியே அடுத்த சனிக்கிழமை, தனது வயதின் சிரமத்தையும் பாராமல், என் வேண்டுகோளுக்கிாங்கி, தானே அழைத்துச் சென்ருர், கோவிந்த சாமிராவ் நாடகக் கம்பெனி மனமோஹன நாடக சபா' என்கிற பெயருடைத்தாயிருக்தது. இக் கம்பெனியின் நாடகங்கள் சென்னே செங்காங் கடை நாடகக்கொட்டகையில் அக்காலம் நடத்தப்பட்டுவந்தன. தற்காலம் இந்த இடத்தில் ஒரு சினிமா நடைபெற்று வருகிறது. அக்காலத்தில் த ட்டோடு வேய்ந்த கூரைக் கொட்டகையாயிருந்தது. ஒன்பது மணிக்கு நாடகம் ஆரம்பம் என்று என் தங்தையைத் துரிதப்படுத் தினேன் அவர் அக்காலத்திய நாடகக்கம்பெனிகள் குறிப் பிட்டபடி ஆாம் பியாத வழக்கம் அறிந்தவராய், 'அவசர மொன் றுமில்லை, சற்றுப் பொறுத்துப்போகலாம்' என்று கூறியும், நான் கிர்ப்பத்திக்க, எனக்கு புத்திபுகட்ட வேண்டி, சரி ஆளுல் உன்பாடு” என்று பதில் உரைத்து, ஒன்பது மணிக்கு முன்பாக நாடகக்கொட்டகைக்கு என்னே அழைத்துச் சென்றர். போன வுடன், எனக்குப்புத்தி வந்தது. என் தகப்பஞர் கூறியது சரியென்று அப்பொழுது தான் பட்டது. நாடகக் கொட்ட கையில் அப்பொழுது தான்.ஜனங்கள் வர ஆரம்பித்துக்கொண் டிருந்தனர்: விளக்குகள் கூட முற்றிலும் ஏற்றப் படவில்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/26&oldid=727434" இலிருந்து மீள்விக்கப்பட்டது