பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

豁堡 நாடகமேடை நினைவுகள் திவ்யமா யில்லாவிட்டாலும், கம்பீரமாயிருக்கும்; சிறுவர்களா கிய எங்கள் குரலேவிட இவர் குரல் தான் ஒத்திகை செய்யும் பொழுது அதிகமாய் கேட்கும் மூன்று நான்கு மணி நேரம் எங்களுடன் தளராது பாடுவார். அவருக்குப் பின்னல், அவரைக் கிழவர் என்று ஏளனம் செய்தபோதிலும், அவருக்கு அவ்வய கில் அவ்வளவுசக்தி இருந்ததேயென்று. இரகசியத்தில் பொரு மைப்படுவோம். அப்படி அவரை ஏளனம் செய்தவர்களில் நானும் இன்னும் ஒன்றிரண்டுபெயர்கள் தவிர, மற்றவர்களெல் லாம் அவருடைய வயதில் பாதிக்கும் முக்காலுக்கும் வராமல் இறந்து விட்டனர். இப்பொழுது சிலர் கூறுகிறபடி அவர் பழய காலத்து மண்ணுலானவர். இவ்வளவு இருந்தும் அவரிடத்தில் இரு குறைமாத்திரம் இருந்தது. கொஞ்சம் தாகத்திற்குச் சாப் பிடுகிற வழக்கம் உண்டு. அந்தப் பதத்தின் அர்த்தம் அறியாத எனது நண்பர்களுக்கு கொஞ்சம் வெளிப்படையாய்ச் சொல்ல வேண்டும் நான், தாகத்திற்குச் சாப்பிடுவதென்ருல் வெறும் தண்ணீரைக் குடிப்பதன்று, சாராயம் முதலிய லாகிரி வஸ்துக் களே உபயோகிப்பதாம். ஒத்திகை முடித்தவுடன் தினம், காரிய தரிசியாகிய முத்துக்குமாரசாமி செட்டியாரிடமிருந்து கால் ரூபாய் கடனுக் வாங்கிக்கொண்டு போய்விடுவார். முதலில் ஏதோ செலவிற்கு வாங்கிக்கொண்டுபோகிருர் பாபம் என்று எண்ணி யிருந்தேன். சில தினங்களுக்குப் பிறகுதான் அந்தச்செலவு சாாயக்கடையில் செய்யப்ப்ட்டது என்பதை அறிந்தேன்! அறிந் தும் நான் என்ன செய்வது? அவான்றி பாட்டுகள் எழுதி எங் களுக்குப் பாட்டுகள் கற்பிக்கத்தகுந்தவர்கள் ஒருவரும் அச் சமயம் கிடைக்கவில்லை. இவரைக் கொண்டுதான் மேற்கண்ட புஷ்பவல்லி என்னும் நாடகத்திற்கும், எனது இரண்டாவது நாடகமாகிய சுந்தரி அல்லது மெய்க்காதல்’ என்பதற்கும், பிறகு நான் எழுதிய கள்வர் தலைவன்' என்னும் நாடகத்திற் கும் பாட்டுகள் எழுதிக்கொண்டோம். இவர் தமிழ் கன்ருய் வாசித்தவர். சொந்பிழையில்லாமல் பாட்டுகள் எழுதுவார். அன்றியும் சங்கீதத்தில் மிகவும் தேர்ந்தவர். அதற்குச் சில வருஷங்களுக்கு முன்பாகக் காகி விஸ்வநாத முதலியார் என்ப வர் அச்சிட்ட டம்பாச்சாரி விலாசத்திற்கு வர்ண மெட்டுகள் எழுதுவதில் மிகவும் உபயோகமா யிருந்தவர். நான் இப் பொழுதிருக்கும் வீட்டிற்கு அருகாமையில் தான் வசித்துக் கொண்டிருந்தார். இவர் இரண்டு மூன்று வருடங்கள் சென்ற பின் காலககியடைந்தார். அதைக் கேள்விப்பட்ட என் தந்தை யாரும் நானும் துக்கப்பட்டோம். இவரை தான், சங்கீதத்திற் கேற்றபடி சாஹித்யம் தமிழிற்செய்ய, எனக்குக் கற்பித்த குரு வாகப் பாவிக்கின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/39&oldid=727448" இலிருந்து மீள்விக்கப்பட்டது