பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 35 மேற் கண்டபடி பாட்டுகளெல்லாம் கட்டியான பிறகு சற் றேறக்குறைய மூன்று மாதங்கள், அந்நாடகத்திற்கு ஒத்திகை நடத்தினுேம், வியாழக்கிழமைகளில் சாயங்காலம் மூன்று மண் நேரமும், ஞாயிற்றுக்கிழமைகளில் ஆறுமணி நோமும் ஒத்திகை நடத்துவோம். அக்காலத்தில் நடர்களெல்லாம், சிறுவயதடை பவர்களா யிருந்தபடியால் சீக்கிரம் எங்கள் பாடத்தைப் படிக் துவிட்டோம். அன்றியும் எங்களில் பெரும்பாலர்க்கு ஞாபக சக்தி நன்முகவிருத்தது. பிறகு ஒருநாள் நியமித்துப் பகிரங்க மான ஒத்திகை போடவேண்டுமென்று தீர்மானித்தோம். அத ற்கு எங்களுக்குத் தெரிந்தவர்களாகிய நண்பர்களில் சில முக்கிய மானவர்களை மாத்திரம் வரவழைத்தோம். இந்தப் பகிரங்க் ஒத்திகை யானது தம்பு செட்டித் தெருவில் ஜெயராம் நாயக ருடைய வீட்டில் நடந்தது, ஏறக்குறைய 50 பெயர் வத்திருக் தனர். எங்களிடம் அப்பொழுது கிரைகளே கிடையாது. ாங்கத்தை மறைக்க ஒரு தோம்புதிரை தான் கட்டினுேம் உடை களும் எங்களிடம் அப்போது ஒன்றும் கிடையாது; என் தகப் பஞ்ர் கார்டியனுகவிருந்த ஒரு ஜமீன்தாாருடைய சரிகை உடுப் புகளில் சிலவற்றை நான் கொடுக்க, அவைகளைத்தான் உபயோ கிக்க வேண்டியதாயிருந்தது. இாண்டு ஸ்திரி வேஷங்களுக்கும் ஜெயராம் நாயகர் வீட்டிலிருந்து இரண்டு புடவைகளைக் கொடுத் தனர், நாற்பது வருடங்களுக்குமுன் கடந்த இந்த ஒத்தி கையில் எனக்கு இரண்டு மூன்று சமாசாரங்கள்தான் முக்கிய மாய் ஞாபகம் இருக்கிறது. ஒன்று, ராஜாவேடம் தரித்த ஒருவர் (அவர் இன்னும் ஜீவந்த ராயிருப்பதால் அவர் பெயரை வெளியிட எனக்கு இஷ்டமில்லை) நாடக ஆரம்பத்திற்குச் சில நிமிஷங்களுக்கு முன் தான் தன் வீட்டிலேயே வேஷம் போட்டுக் கொண்டு ஜட்கா வண்டியில் ஏறிக்கொண்டு வந்து சேர்ந்தார் அவர் முகத்திற் பூசிய வர்ணமானது வியர்வையில்ை ஒழுக ஆரம்பித்து மிகவும் ஆபாசமாயிருந்த தென நாங்கள் எல்லாம் நகைத்தோம் என் பதே! போதாக் குறைக்கு ஒரு காட்சியின் கடைசியில் இவர் பாடவேண்டியிருந்தது. பாடுவதற்காக உடனே ஆரம்பிக்க வேண்டுமென்று எவ்வளவோசொல்லியும் அன்று அதைக் கவனி யாது, பக்கவாத்தியக்காரர்களைப் பார்த்து தலையை அசைக்க ஆரம்பித்தார். அதன் பேரில் திரையை இழுக்க வேண்டி கியமிக்கப்பட்டவர், திரையை இழுக்கச் சொல்லுகிருர், என எண்ணி, திரையை இழுத்து விட்டார்; அதன் மீது அவருக்கு அடங்காக் கோபம் வந்து கிரைக்குப் பின்னிருந்தே தான் பாட வேண்டிய பாட்டைப்பாடி முடித்தார்! இதைச் சொல்லிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/40&oldid=727450" இலிருந்து மீள்விக்கப்பட்டது