பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நாடகமேடை நினைவுகள் சொல்லி அநேகதாம் நாங்கள் கைத்துக் கொண்டிருக்தோம்! இந்த அங்கத்தினர் எங்கள் மீது மிகவும் கோபம் கொண்டு சீக்கிரத்தில் சபையைவிட்டு நீங்கி விட்டார். பாவம் இரண்டா வது; எங்களுக்கெல்லாம் முகத்தில் வர்ணம் தீட்ட அக்காலத்தில் பெயர்பே ன் நடராகிய சுப்பரா பாச்சாரி என்பவரின் கம்பெனி யில், அவருக்கு வேஷம் தீட்டும் அப்பு என்பவன் வந்ததே, இவன் அன்று முதல் ஒன்பது வருஷ காலம் ஒரு நாடகம் தவருது எங்கள் சபைக்கு ஊழியனுப், மிகுந்த சுருசுருப்புடன் உழைத்த வேலையாள் இவனைப்பற்றிச் சில விஷயங்கள் பிறகு கூறவேண்டி யிருக்கும் நான்; இவன் சான் அன்று நடித்ததைப் பார்த்து, சுப்பாயாசாசியைப் போல் நன்முகப் பெயர் எடுப்பேன் என்று கூறிஞன். இதை எனக்கு முகஸ்து தியாகக் கூறியிருக்கவேண்டு மென்று நினைக்கிறேன். அன்று ஸ்திரீவேஷம் பூண்ட ஜெயராம் நாயகருக்கும், பாலுமதி வேஷம் பூண்ட அ. சுப்பிரமணிய ஐயருக்கும், ஜெய சாம் நாயகருடைய விட்டு ஸ்திரீகள், ஸ்திரிவேஷம் தரிப்பித் தனர். சுப்பிரமணிய ஐயர் ஜெயராம் நாயகருடன் சிறுவயது முதல் ஒன்ருய்ப் படித்தவர்; அவர் விட்டில் உள்ளவர்களுக் கெல்லாம் குழந்தை வயது முதல் என்ருய்த் தெரிந்தவர். அன்றைத்தினம் ஒத்திகையைப் பார்த்த எங்களுடைய கண்பர்களுள் பெரும்பாலர் ஒத்திகை மிகவும் என்ருயிருந்த தெனப் புகழ்ந்தனர். இது சிறுவர்களாகிய எங்களுக்கு மிகவும் குது ஹலத்தைக் கொடுத்தது. உடனே சபையின் கிர்வாகசபைக் கூட்டத்தில், நாங்கள் கூடிய சீக்கிரத்தில் விக்டோரியா பப்ளிக் ஹாலில் நாடகங்கள் கடத்த வேண்டுமென்றம், அதற்கு முன் இன்னுெரு நாடகம் தயார் செய்து கொண்டு, இரண்டு நாடகமாகப் போடவேண்டும் என்றும் தீர்மானித்தோம். அந்த இரண்டாவது நாடகத்தை கனே எழுதவேண்டுமென்று எனது நண்பர்கள் வற்புறுத்தினர். நான் ஆலோசித்து, இரண்டாவது நாடகம் பழய கதையை ஒட்டியதாக இருக்கலாகாது, புதிய கதையாக இருக்கவேண்டு மெனத் தீர்மானித்து, "சுந்தரி அல்லது மெய்க்காதல்’ என்னும் நாடகத்தை எழுதத்தொடங்கி கூடிய சீக்கிாத்தில் எழுதி முடித்தேன். இக்காடகக்கதை என்னுல் கற்பித மானதே; சில இடங்களில் தான் சிறு வயதில் என்தாயாரிட மிருந்து கேட்ட கதைகளின் சக்தர்ப்பங்களை உபயோகித்திருக்கலாம். இருந்தும் பொத்தத்தில் -க்கதை நூதனமான திென்றே சொல்ல்வேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/41&oldid=727451" இலிருந்து மீள்விக்கப்பட்டது