பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 43 ம லி ல், நாடகமேடை சித்தம் செய்து கொடுத்தார். ஒத்திகைக்கு முக்திய தினம், இவ்வாறு எங்களுக்காக மிகுந்த அலேச்சல்பட்ல்ே வயோதிகாான அவருக்கு (அப்பொழுது அவருக்கு வயது 62) ஜ்வரம் வந்துவிட்டது. அதன் பேரில் இந்த ஒத்திகையும் தான் பார்ப்பதற்கில்லையென்று விசனப்பட, பெரிதன்று, விக்டோரியா ஹாலில் நாடகம் போடும் பொழுது நீங்கள் பார்க்கலாம்' என்று சொல்லி நான் தேற்றியும், அக் கவலை நீங்கினவர் அன்று. மறுநாள், அதாவது ஒத்திகைதினம் காலை, கொஞ்சம் ஜ்வாம் நீங்கவே, நான் இரவு வருகிறேன்,' என்ற மெல்லக் கூறினர். அதற்கு நான் ஆட்சேபித்து, 'இாவில் துாக்கம் இல்லாத படி விழித்தால் உங்கள் உடம்பிற்கு உதவாது, மறுபடி ஜ்வாம் வந்தாலும் வரும், வேண்டாம்,' என்று சொல்லி, ஒருவேளை என்னையறியாதபடி எங்கு வந்து விடு கிருரோ என்று, அவருக்கு காங்கள் கொடுத்திருந்த டிக்கட்டை என் பீரோவில் வைத்துப் பூட்டிவிட்டு, சாயங்காலம் ஒத்திகை நடக்கும் வீட்டி ற்கு வேஷம் போட்டுக்கொள்ளச் சென்றேன். இந்த ஒத்திகைக்கு பென் சுகளாலாகிய மேடை ஒன்று கிர்மாணித்தோம் அன்றியும் இரண்டு மூன்று திரைகளும் கிடைத்தன; மிகவும்பழமையான திரைகள், அதில் காட்டுத்திரை ஒன்று மாத்திரம் எனக்கு மிகவும் நன்முய் ஞாபகம் இருக்கிறது; அக்காட்டுத் திரையின் முக்கால் பாகத்தில் இரு பெரும்புலி எழுதப்பட்டிருந்தது . ஆகவே காங்கள் காட்டு சீனில் வேட் டையாடியபொழுது இந்தப் பெரும்புலியின் பக்கத்தில் நின்று கொண்டு தான் வேட்டையாடினுேம் ! நாடகம் பார்ப்பதற்காக ஸ்திரீகளுக்கும் பிரத்தியேகமாக இடம் ஹாலின் பின்னுல் ஏற்பாடு செய்திருந்தோம். அங்கத்தி னருடைய பத்துக்களாகிய ஸ்திரீகளுக்குச் சுமார் 50 டிக்கட்டுகள் வரையில் கொடுத்திருத்தோம். ஆயினும் ஸ்திரீகள் கோஷாக்க ளாக இருக்கவேண்டு மென்று தீாமானித்து, ஒரு பச்சை வர்ண முடைய கொசுவலையை எதிரில் கட்டி வைத்தோம் . முன்சொன்ன ஜமீன் தாருடைய உடுப்புகளில் சிலவற்றை இப்பொழுதும் உபயோகித்த போதிலும் இந்த ஒத்திகைக் கென்று இரண்டு புதிய உடைகள் தைத்தேசம்,சோடின் (Satin) பட்டில் தைத்துச் சரிகை கோண்டுவைக்கப்பட்டிருந்தது. அதை விட நூறுமடங்கு விலையுள்ள உடைகளைப் பின் வந்த நாடகங் களில் கான் தரித்திருக்கிறேன்; இருக்தம் முதல் முதல் அந்த உடையைத் தரித்தபொழுது எனக்குண்டான உவகை, பிறகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/48&oldid=727458" இலிருந்து மீள்விக்கப்பட்டது