பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 蛇 பர். அவருக்கு சங்கீதத்தில் அதிகப்பயிற்சி இல்லை, இவர் இனிய குரலுடன் என்ருய்ப் பாடுவார். அவர் அடிப்பதில் மிகவும் நிபுணர், இவர் இவ்விஷயத்தில் நாம் எவ்வளவு சொல்லிக் கொடுக்கிருேமோ அவ்வளவு தான் மேடையில் நடிப்பார். மிகுக்க அடக்கமான சுபாவமுடையவர், பேசுவதும் மெல்லிய குரலுடன் பேசுவார். இவர் புஷ்பவல்லி என்னும் நாடகத் தில் முதலில் புஷ்பவல்லியின் தோழியாகவும், பிறகு மந்திரி குமாரனை பு த் தி சேனன் மனைவியாகிய பானுமதியாகவும் வேடம் பூண்டனர். சுந்தரி என்னும் நாடகத்தில் சத்ய வர்தன் மனைவியாகிய சாகரீகை வேடம் பூண்டனர். எனது மூன்ருவது நாடகமாகிய லீலாவதி-சுலோசனுவில் இவர் தான் முதல் முதல் சுலோசனை யாக நடித்தவர் இவருக்கென்றே இந்த நாடக பாத்திரத்தை :ன் எழுதினேன் என்று ஒரு விதத்தில் கூறவேண்டும், இவர் இாண்டு முறை சங்கத்தில் என் மனவியின் வேஷம் தரித்ததினுல், எனது நண்பர்கள் இவரை எனது மனைவி என்று ஏளனம் செய்வார்கள். இவர் கடைசியாக ஸ்திரீ வேடம் தரித்தது சுகுண விலாச சபை பெங்களூருக்குப் போயிருந்த சமயத்தில் மனுேஹான் என்னும் சாடகத்தில் விஜ யாளாக, அதன் பிறகு இவர் உத்யோக விஷயமாக வெளியூ ருக்கு மாற்றப்பட்டபடியால் சபையில் வேடம் கரிப்பதற்கு அனு கூலப்படாமற் போயிற்று. இவர் அக்காலம் மக்கிரி குமாரன் மனேவியாகிய பானுமதியின் வேடத்தில் ஆகிரிசாகத்தில் பாடிய ஒரு பாட்டு இன்னும் எனக்கு கன்முய் ஞாபகமிருக்கிறது. கேட்பவர் உள் ளம் உருகும்படியாக அப்பாட்டைப் பாடுவார். அதைக் கேட்டவர்கள் ஏதாவது கூட்டங்களில் சங்கீதம் கேட்க வேண்டுமென்ருல் இவரை அப்பாட்டைத் தான் பாடச் சொல் வார்கள். ஆகிரி ராகமானது கிேகியில் பாடவேண்டிய ராகம். நாட்கமாடும்பொழுது இவர் அப்பாட்டை பாடவேண்டிய காலமும் சுமார் பனிரெண்டு மணியாகும், நடு நிசியில் இவர் அப்பாட்ட்ை கிசப்தமாயிருக்கும் பொழுது பாடுவது மிகவும் மனஉருக்கமாயிருக்கும். இவர் இப்பொழுது வயோதிகாாய் கவர்ன் மென்ட் உத்தி யோகத்திலிருந்து பென்ஷன் வாங்கிக்கொண்டு பட்டணம் வந்து சேர்ந்து, தம்புச்செட்டி விதியில் வசித்துக்கொண்டிருக்கிருர், எதோ சிாஹசாத்திகுல் வாய் வில்ை பிடிக்கப்பட்டு சில வருஷங்களாக படுத்தபடுக்கையாய் இருக்கிருர். இளமையும் பெளவனமும் நிலையாமைக்கு இவரே எனக்குப் பிரத்தியட்சம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/52&oldid=727463" இலிருந்து மீள்விக்கப்பட்டது