பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 நாடகமேடை நினைவுகள் அங்கத்தினரும் அதிகமாயினர். ஆகவே சுகுணவிலாச சபை, சிறு குழவியர்யிருந்த பொழுது, அதை அன்புடன் ஆதரித்து வளர்த்தவர்களுக்குள், என் தந்தையை முக்கியமானவர் என்று கூற வேண்டும் என் எண்ணுகிறேன். மேற் சொன்னபடி இரண்டு நாடகங்களுக்கு பயிாங்க ஒத்திகை நடத்தி, பார்த்தவர்களுடைய சம்மதத்தைப் பெற்ற காங்கள், கூடிய சிக்கிரத்தில் $àಟಿ-1ನ್ಸಿಲ್ಲ! பப்ளித் ஹாலில் அங் நாடகங்கள் நடத்த வேண்டுமென்று தீர்மானித்தோம். அக்காலத்தில் சபையின் அங்கத்தினர் பெரும்பாலும் பள்ளிக்கூடத்தில் வாசிக்கும் சிறுவர்களாயிருந்த படியால், எங் களது படிப்புக்கு விக்னம் வராத படி, பரீட்சைக்குப் போகும் ஒவ்வொருவரும் பரீட்சை காலத்துக்கு மூன்று மாதம் முன்பாக சபையின் கூட்டங்களுக்கு வாக்கூடாது என்று ஒரு சட்டம் ஏற்படுத்திக்கொண்டோம் என்று முன்பே தெரிவித் திருககி றேன். அந்தச் சட்டத்தின் படி மறுபடி மூன்றுமாத காலம் நான் சபைக்குப் போகாதிருந்தேன். இதற்குள்ளாக விக்டோ ரியா ஹாலில் மேற்சொன்ன இரண்டு நாடகங்களையும் ஆடுவ தற்கு ஏற்பாடுகள் செய்தோம். அவ்வாறு செய்வதில் எங்களுக்கு எ ற் ப ட் ட முதல் கஷ்டம் என்ன வென்ருல், நாடகங்களுக்கு வேண்டிய திரை கள் இல்லாமையே. இலவசமாக தி ை க ள் வாடகைக்கு இப்பொழுது கிடைப்பது போல் அப்பொழுது கிடையாது. அன்றியும் அப்படிக் கிடைப்பதாயினும் எங்களுக்கு வேண் டிய திரைகள் அகப்படுவது கஷ்டமாயிருக்தது. ஆகவே எப் படியாவது, எங்களுக்கு வேண்டிய கிரைகளைப் புதிதாய் செய்து கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தோம். இதற் குக் கையில் காசில்லை; என்ன செய்வது என்று யோசித்து, ஒரு யுக்தி செய்தோம். அச்சமயம் ராமநாதபுரம் சேதுபதி அவர்கள் சென்னையில் வந்திருந்தார். அவரை சபைக்கு ஒரு பேட்ரன் (Patron) ஆகக்கோரி, அவர் தயாள குணத்தின் மூல் மாக எ.காவது பொருள் சம்பாதிக்கலாம் என்று தீர்மானித் தோம். பாஸ்காசேதுபதியவர்களுடைய தகப்பனுர், என் தகப் பணுருக்கு நன்ருய்த் தெரியும் என்று அறிந்த கான், இவ்விஷ யத்தைப்பற்றி, என் தந்தையிடம், சாப்பாட்டின் பேரில், மெல்ல தெரிவித்தேன். அவரும் இதற்கிசைந்தார். சேதுபதி அவர்களுக்கு எழுதி ஒருநாள் காங்கள் அவரைப் பார்ப்பதற் காக குறித்துக் கொடுத்தார். அன்றைத்தினம், சபையின் கிர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/57&oldid=727468" இலிருந்து மீள்விக்கப்பட்டது