பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் என்று காண்பிப்பதற்காக, கலா சங்கத்தின் இருப்பிடமாகிய செனெட் ஹவுசை (Senate House) எழுதி, தமிழ் நாடகத்தை ஒரு மாதுருவமாக உருவகப் படுத்திவரைந்து, கற்குணத்தின் பலன் ஏற்குணமே என்ற பொருள் படும்படியான ஒரு ஆங்கிலப் பழமொழியை எங்கள் பிருதாக வரைந்துவைத்தோம். இந்தப் படுதா அநேக வருவடிம் எங்கள் சபையின் முதல் படுதாவா உப யோகிக்கப்பட்டு, நாளாவர்த்தியில் மிகவும் பழமை யடைந்து கிழிந்துபோய் விட்டது; மற்றப் படுதாக்களும் சுமார் பத்து அல் லது பன்னிரண்டு வருஷங்கள் உழைத்து ஜீர்ணமாகிப் போயின. சேதுபதி அவர்கள் அளித்த முன் னுாறு ரூபாயும் இதற் குச் சரியாகப் போகவே, நாடக உடுப்புகளுக்கு என்ன செய்வது என்று ஆலோசிக்க ஆரம்பித்தோம். இதிலும் கருணைக் கடவுள் எங்களுக்கு வழி காண்பித்தார். தஞ்சாவூர் அரண்மனையைச் சார்ந்த, சரபோஜி மகாராஜாவின் வம்சத்திலுதித்த ஒருவர், பிரின்ஸ் பாட்சாராம் சாயப் என்பவர் சென்னைக்கு வந்தார். வெங்கடகிருஷ்ண நாயுடு என்னும் எங்கள் சபை கிர்வாகக் கூட் டத்தின் அங்கத்தினர் (இவரைப்பற்றி முன்பே எனது நண் பர்களுக்குக் கொஞ்சம் கூறியிருக்கிறேன்) இவருக்கு சிநேக மாளுர், பாட்சாராம் சாயப் தஞ்சைக்குத் திரும்பிப் போன போது, வெங்கடகிருஷ்ண நாயுடுவையும் தன்னுடன் அழைத் துச் சென்ருர். அந்த சமயம் பார்த்து, எங்கள் கிர்வாக சபை யார், சபைக்கு ஏதாவது பொருள் உதவி செய்யவேண்டுமென்று, ஒரு கிருபம் அவருக்கு அனுப்பினர்கள். சில தினங்கள ஒன் ஆ.ம் பதில் வரவேயில்லை. ஒரு நாள் கான் ஏதோ படித்துக்கொண்டிருக்த பொழுது, கிடீரென்று, எனது நண்பரிடமிருந்து பாட்ச்ாராம் சியப் ரூபாய் 200 கொடையளித்ததாகக் காகிதம் வந்தது. அதைக் கண் டவுடன் மிகவும் சந்தோஷப்பட்டங்ணுய், அன்று சாயங் காலம் எனது மற்ற நண்பர்களைச் சக்கித்தபொழுது, இதைக் குது கலத்துடன் அறிவித்தேன். அவர்களும் சந்தோஷப்பட் டார்கள். உடனே இந்த ரூபாயைக்கொண்டு எங்களுக்கு வேண்டிய உடுப்புகளைத் தைத்துக்கொள்ள வேண்டுமென்று தீர் மானித்தோம். பணத்துடன் நாயுடு தஞ்சாவூரிலிருந்து வந்த அடன், காலம் போக்காமல் உடனே வேண்டிய வெல்வெட்டுகள் வாங்கி, அக்காலத்தில் நாடகங்ளுக்கு உபயோகிக்கப்பட்ட, சம்கி (Chanki) உடுப்புகளைத் தைத்தோம். இந்த உடுப்புகளைப் பற்றி எனது நண்பர்கள் கொஞ்சம் அறியவேண்டியது அவசியம், அக்காலத்தில் இன்ன நாடகத்தில் இன்ன வேஷதாரிக்கு, காலக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/59&oldid=727470" இலிருந்து மீள்விக்கப்பட்டது