58 நாடகமேடை நினைவுகள் இதன் பேரில், சபையை ஆதரிக்கத் தக்கவர்கள் என்று எங்களுக்குத் தோன்றிய பெரிய மனிதர்களை எல்லாம் பார்த்து வந்தோம். அவர்களுள் இரண்டு பெயர்களுடன் நடந்த விர்க்கா ந்தத்தை மாத்திரம் இங்கு எடுத்து எழுதுகிறேன். காரிய தரிசியாகிய முத்துக்குமாரசாமி செட்டியாரும் நானுமாக காலஞ்சென்ற ராமசாமி ராஜு என்பவரைப் பார்க்கப் போனேம். இவர் சீமைக்குப் போய் பாரிஸ்டர் பரீட்சையில் தேறி வந்த வர். சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் வல்லவர். தமிழில் இதற்குச்சில வருஷங்களுக்கு முன்னமே பிரதாப சந்திர, விலாசம் ' என்னும் நாடகத்தை எழுகி அச்சிட்டவர். கவே எங்கள் சபையை இவர் ஆதரிக்கத் தக்கவர் என் றெண்ணி இவரிடம் சென்ருேம். இவரது பங்களாவின் கதவு சாத் தப் பட்டிருந்ததால், அரைமணி சாவகாசம் வெளியில் உட்கார்க் திருந்தோம், காலை எட்டு மணிக்கு மேல் கதவைத்திறந்து கொண்டு வெளியேவந்தார். உடனே நாங்கள் வணங்கி, எங் களே இன்னுரென்றும் இன்ன காரியத்திற்காக வந்திருக்கின் ருேம் என்றும் தெரிவித்துக்கொண்டோம். அதன்பேரில் கோர்ட் டில் ச ட்சியை கிராஸ் (Cross) கேள்விகள் கேட்பது போல் எங்களைக் கேட்கத்தொடங்கினர். அவற்றிற் கெல்லாம் நான் பதில் கூறிக்கொண்டே வந்தேன். என்ன நாடகங்கள் போடப் போகிறீர்கள் என்று கேட்க, நான் எனது இாண்டு கரடங் களின் பெயரையும் சொன்னேன். யார் அவைகளை எழுதி, யது? என்று அவர் கேட்க, நான்தான் எழுதினேன் என்று பதில் உரைத்தேன். உடனே கண்கள் மல்ர, என்னே விழித் துப் பார்த்தார் ! அப்பொழுது எனக்கு வயது 19; உருவத்தில் அவ்வளவு வயதுடையவனுகக் கூட நான் தோற்றவில்லை என்று என் அக்காலத்து நண்பர்கள் பல கடவைகளிற் கூறிய துண்டு. ஆகவே இந்தச் சின்ன பையனுவது நாடக மெழுதுவதாவது என்று ஆச்சரியப்பட்டார்போலும். பிறகு சு 5 கரியென்னும் நாடகத்தின் கதையைக்கேட்க, சுருக்கிச்சொன்னேன். அதனு டன் விடாமல், இந்த நாடகத்தில் பாட்டுகள் உண்டோவென்று கேட்டார். உண்டென்று சொல்லி, காயுமான முதலியார் கட்டி யிருக்கிருர் என்று கூற, அகில ஏதாவதொன்றைப் பாடு என்று கேட்டார் உடனே, என் யெளவனக் கொழுப்பினலும், சடை யின் காரியத்தை எப்படியாவது ஈடேற்றவேண்டு மென்னும் ஊக்கத்தினுலும் சுந்தரி நாடகத்தில் சத்திய வந்தன் பாட வேண்டிய பாட்டுகளிலொன்றை, பக்க வாத்தியம் ஒன்றுமின்றி பாடினேன் இவன் என்ன விடாகண்டனுயிருக் கிருன் என்ற எண்ணத்தினலோ, அல்லது தனது கிராஸ் பரிட்சைக்கெல்லாம்
பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/63
தோற்றம்