பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 3. தேறின பிறகு, முதலில் தமிழ் உபாத்தியாயராக இருந்தார். பிறகு பள்ளிக்கூடங்களைப் பரீட்சை செய்யும் ' இன் ஸ்பெக்டர் ஆப்ஸ்கூல்ஸ் ' என்னும் உத்தியோகத்தில் அமர்ந்திருந்தார். தானே தமிழ்வ சக புஸ்தகங்கள் முதலிய பல அச்சிட்டார். இவை காரணமாக எங்கள் வீட்டில் ஏறக்குறைய இரண்டாயிரம் புஸ்தகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இருந்தன. தமிழ் புஸ்தகங்களே அச்சிடும் ஒவ்வொருவரும் அவருக்கு ஒரு புஸ்தகம் அனுப்புவதுண்டு. நான் தமிழ் நன்குய்ப் படிக்கத் தெரிந்த நாள் முதல், அவரிடமுள்ள தமிழ்க்கதை புஸ்தகங்களை யெல்லாம் ஒவ்வொன்முகப் படித்து வந்தேன்; அங்ஙனமே ஆங்கிலம் படிக்கக் கற்றவுடன், ஆங்கிலேய கதைப் புஸ்தகங் களையும் நாடகங்கள் முதலியனவையும் படிப்பேன். இவ்வாறு ஷேக்ஸ்பியர் மகா நாடக கவி எழுதிய நாடகங்களையும் அச்சிறு வயதிலேயே படித்தேன். அச்சிறு வயதில் மேற்கண்ட புள் தகங். களில் நான் அர்த்தம் அறியக்கூடாத பல வார்த்தைகளும் சொற்ருெடர்களும் இருந்தன வென்ருலும், மொத்தத்தில் கதை களைக் கிரஹறித்துக் கொள்வேன். அக்கதைகளை யெல்லாம் படிக்கும்பொழுது, அக்கதைகளின் நாயகர்களாக என்னேயே பாவித்துக் கொண்டு, அவர்கள் துக்கப் படுங்கால் நானும் துக்கப்படுவேன்; அவர்களுக்கு யாராவது இடையூறுகள் செய்யுங்கால் கோபங்கொள்வேன்; அவர்களுக்கு நற்கதி வாய்க் குங்கால் குது ஹல மடைவேன் ; இது பிற்காலத்தில் நான் நாடகங்கள் எழுதுவதற்கு மிகவும் பிரயோஜனப்பட்டதுமன்றி, நாடகங்களை நடிப்பதற்கு எனக்குப் பேருதவியா யமைந்தது. ஷேக்ஸ்பியர் மகாகவி யெழுதிய நாடகங்களின் கதைகளை லாம்ப் (Lamb) என்பவர் வசன ரூபமாக எழுதிய புஸ்தகத்திை. கான் வாசித்த பொழுது, அதில் மெக்பெத் (Macbeth) என்னும் துக்ககரமான கதையைப் படிக்குங் கால், டங்கன் (Dunean) கொலையுண்ட பாகத்தை நான் முதல் முதல் படித்த பொழுது, தனியாய் நான் மேல்மாடியில் என் தகப்பனுருடைய மேஜையரு கில் படித்துக் கொண்டிருந்த அப்புஸ்தகத்தை மூடாமலும் விட்டு, பயந்து, படபடத்த மார்புடன் என் தாயாரிருக்குமிடம் நான் ஒடியது இப்பொழுதும் எனக்கு ஞாபகம் வருகிறது. மஹாபாரதத்தில் துரோன பர்வத்தில் பதின் மூன்ரும் நாள் யுத்தத்தில் அபிமன்யு கொலையுண்ட கதையை வாசித்த பொழுது, என்னேயும் அறியாதபடி கண்ணிர் தாரை தாரையாக எனக்குவர, அருகிலிருந்த எனது அத்தையும் சிற்றன்னேயும் ஏன்னே ' என் அழுகிருயிப்படி, இது கதை தானே ' என்று தேற்றியது இன்னும் என் ஞாபகத்தில் நேற்று கடந்த துபோல் இருக்கிறது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/8&oldid=727493" இலிருந்து மீள்விக்கப்பட்டது