பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 நாடகமேடை நினைவுகள் போவேன். இப்படிச் செய்யும் பொழுது, கதையின் போக்கில், முன்பு நான் யோசித்ததைவிட, யுக்தமானதாக ஏதாவது தோற்றினுல், அதன் படிக் கதையை மற்றுவேன்; பிறகு இம்மா திரியாகக் காட்சிகளை முற்றிலும் பிரித்தானவுடன், ஏ, பி, சி, டி. முதலிய பாத்திரங்களுக்கெல்லாம் தக்கபடி யோசித்து பெயர் கள் கொடுப்பேன்; கூடியவரைக்கும் ஒவ்வொரு நாடக பாத்தி ாத்திற்கும் குணக்கிற்குத் 55 Lಣ್ಣ- @LL ಒ7 தெடுத்துக் கொண்டு போவேன். இது முடிந்த பின் தான் உட்கார்த்து நாட கத்தை எழுத ஆரம்பிப்பேன். மேற் சொன்னபடி 'விலாவதி-சுலோசன வுக்கும், நாடகத் தின் பிரிவுகளை காட்சிக்காட்சியாக முதலில் எழுதி வைத்துக் கொண்டேன். முதல் முதல் இந்நாடகத்திற்கு பொருமை’ என்கிற பெயரையே கொடுக்கத் தீர்மானித்தேன். பிறகு காட்சி களின் பிரிவுகளைக் குறித்துக் கொண்டபின் அதை மாற்றி, லீலாவதி-சுவோசனு ' என்கிற பெயரைக் கொடுக்க வேண்டு மென்று தீர்மானித்தேன். எனது இன்னுெரு வழக்கமும், நாடகங்களைப் புதிதாய் எழுத விரும்பும் எனது நண்பர்கள் அறிவது கலமெனத் திோன்றுகிறது. நாடகத்தின் காட்சிகளை இவ்வாறு பிரித்துக் குறித்துக்கொண்டபின், அறிவிற்சிறந்தோர்களாகிய எனது நண்பர்களுட் சிலரை வரவழைத்து, அவர்களுக்கு நான் எடுத் துக் கொண்ட நாடகத்தின் காட்சிகளின் குறிப்பைப் படித்துக் காட்டு வேன். அதில் ஏதாவது குற்றங் குறையிருக்கிறதா என்று. அவர்களைக் கேட்பேன். சங்கோசமில்லாமல் தாராளமாய் அதைப்பற்றி என்னுடன் பேசும்படி வேண்டுவேன். அவர்கள் கூறும்படியான குளுகுணங்களை யெல்ல ம் கவனித்து, என் சிற் றறிவிற்குப் பொருத்தமானது என்று தோற்றும்படியான விஷ பங்களை யெல்லாம் எடுத்துக் கொண்டு, அதன்படிக் கதையின் விவாங்களை மாற்றிக் கொள்வேன். இப்படி ச் செய்வதினுல் நான் பெரும்பலன் பெற்றிருக்கிறேன். எனது இளைய நண்பர் சளும் இவ்வாறே செய்வார்களாயின் பெரும்பலன் அடையக் கூடும் என்று எனக்குத் தோற்றுகிறது. - இதற்கொரு உதாரணமாக இந்த லீலாவதி-சுலோசஞ’ நாடகத்தின் ஒரு பாகத்தையே எடுத்துரைக்கக்கூடும். இங்காட கத்தின் கதையை அக்காலத்தில் எனக்கு அத்யந்த நண்பர்க்ளா யிருந்தவர்களுள் ஒருவராகிய வாமன் பாய் (Vaman Pai) என் லும் மங்களுள் சிநேகிதர் ஒருவரிடமும், கூறியபொழுது, இக் • *.*.*.*.*

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/85&oldid=727499" இலிருந்து மீள்விக்கப்பட்டது