பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 8] டகத்தில் இரண்டாம் அங்கத்தில் "கைவளை சீன் என்று வழங் கும் ஒரு காட்சியில் முக்கியமான ஒர் அம்சத்தை அவர்தான் இப்படி எழுது வாயாயின் தன்முயிருக்குமென் ற எடுத்துக் கூறி. ஞர். அவர் கூறியது மிகவும் சரியென ஒப்புக்கொண்டு, அப்ப டியே மாற்றி எழுதினேன். இவரிடமிருந்து இன்னும் சில நாட சங்களிலும் சில முக்கியமான குறிப்புகளைப் பிறகு பெற்றேன். இவர் தெய்வகடாட்சத்தினல் இன்னும் உயிருடன் இருக்கிரு.ர். இவர் செய்த உதவிக்காக இவருக்கு கான் இந்த 'கா டகமேடை கினேவுகளின்’ மூலமாக எனது இன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இந்த லீலாவதி-சுலோசளு' என்னும் நாடகத்தைச் சென்னேயில் எழுத ஆரம்பித்த போதிலும், அதன் பெரும் பாகம், திருவனந்த புரத்தில் எழுதும்படி நேர்ந்தது. எங்களு டைய சிறு பிராயம் முதல் பள்ளிக்கூடத்தில் வெயிற்காலத்திற் காக விடு முறை விடும்பொழுதெல்லாம், வருஷா வருஷம் எங் கள் தகப்பனர் எங்களை ஒவ்வொரு ஊருக்கு அனுப்புவது வழக் கம். இதனுல் நான் பெரும் பலன் அடைந்தே ன் என்றே சொல் லவேண்டும். இம்மாதிரியாக என் இருபதாவது வயதுக்குள், அநேகம் ஊர்களைப் பார்த்ததினுல், என் சிற்றறிவு கொஞ்சம் விலாச மடைந்ததென்றே நான் சொல்லவேண்டும். இவ்வழக்கப் படி இவ்வருஷம் எங்கள் தகப்பனர், என்னேயும் என் மூத்த சகோதரர்களுள் ஒருவரையும் திருவனந்தபுரம் அனுப்பினர். இங்கனம் நான் திருவனந்தபுரம் போயிருந்த பொழுது, மத்தி யான காலங்களில் வேருென்றும் கவலே யில்லாமல் சாவகாசம் அதிகமாயிருந்தபடியால், இக் கடகத்தை எழுத எனக்கு மிக வும் செளகர்யமாயிருந்தது. திருவனந்தபுரத்திலிருந்து திரும்பி வந்தவுடன் நாடகத்தைப் பூர்த்திசெய்து, என் நண்பர்களுக் கெல்லாம், என் வழக்கப்படி அதைப் படித்துக்காட்டினேன். அவர்களெல்லோரும் மிகவும் ன்முயிருக்கிறதெனக் கூறிக் குது ஹலத்துடன் சீக்கிரத்தில் அதை ஆடவேண்டுமென்று சொன். ஞர்கள். இன்னின் குருக்கு இன்னின்ன நாடக பாத்திரம் என்று நான் உத்தேசித்து எழுதியபடியே, ஒரு கஷ்டமு மில்லா மல், அவரவர்களுக்கு நாடக பாத்திரங்களெல்லாம் பகிர்ந்து கொடுக்கப்பட்டன். ஒத்திகைகள் வெகு மும்மரமாய் மூன்று மாதம் நடத்திகுேம். அன்றியும் ஒரு நாள் இரவு பூர்ண ஒத்தி கையாக வைத்துக்கொண்டு வேஷத்துடனும் சங்கீதத்துடனும் நடத்திப் பார்த்தோம். தற்காலம் சில சபைகளில், ஒத்திகைகள் 蠶 நாடகத்திற்காக ஹாலுக்குப் பிணம் கட்டி விடுகிருர்களே அம்மாதிரியான வழக்கம் எங்கள் 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/86&oldid=727500" இலிருந்து மீள்விக்கப்பட்டது