பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 83 பாடும் பொழுது, பா டு பவன், சங்கீதத்தின் பூர்ணத்தின் பொருட்டு அல்லும் பகலும் சொல்லி முடியாத ’ என்று இழுத்தான்; சிறுவயதுக் குரும்பில் கான் ' என்னடா அப்பா, அது ? அல்லும் பகலும் சொல்லி முடியாகரீ! எவ்வளவு பெரிய நீ யாக இருக்கவேண்டும் ” என்று ஏளனம் செய்தேன். பாட்டை எழுதியவர் உட்பட எல்லோரும் நகைத்தும், அதை விட்டு வேறு விதமாகப்பாட வழியில்லாமற் போயிற்று! எங்கள். சபையில் நாங்கள் பாடும் சில பாடல்களில் இம்மாதிரியான குற்ற ங்கள் இன்னும் இருக்கின்றன. இம்மாதியான சந்தர்ப்பங்களில் இக் குறைவாாமல் எப்படிப்பாடுவது என்பது இன்றளவும் ஒரு. கஷ்டமாகத்தானிருக்கிறது. இக்குறையை அகற்றும் மார்க்கம் இதைக்கண்ணுறும் சங்கீத வித்வான்கள் யாராவது அறிவிப்பார் களாயின், நானும் எங்கள் சபையாரும் மிகவும் கிருதக்ஞர்களா யிருப்போம், - இந்த நாடகத்திற்காக காங்கள் ஒத்திகைகள் கடத்திக் கொண்டிருந்த சுறுவாயில் எங்களுக்கு நேரிட்ட ஒரு முக்கிய மான கஷ்டத்தைத் தெரிவிக்க வேண்டியவனுயிருக்கிறேன். பல்லாரி சரசவினுேத சபையார் சென்னேயில் நாடகங்கள் ஆடி பதைப் பார்த்து, எப்படி காங்கள் சகுணவிலாச சபையை ஏற்ப த்ெ தினுேமோ, அந்தப்பிரகாரம் இன்னும் சிலர் வேறு சபைகளை ஸ்தாபிக்கத் தொடங்கினர். இம்மாதிரியாக உற்பவித்த நாடக சபைகளில் ஒரியண்டல் டிராமாடிக் லொஸ்ைடி ' என்பது ஒன்று. அப்பெயர் கொண்ட சொஸைடி. பல வருடங்களுக்கு முன் ஒன்றிருந்து யாது காரணத்தாலோ அது கrணத்தை படைந்து அற்றுப் போய்விட்டது. அதன் பேரில் நாங்கள் சுகுணவிலாசசபையை ஸ்தாபித்த வருஷம் வேறு சிலர் இந்த 'ஒரியண்டல் டிாாமாடிக் சொஸ்ைடி' யை மறுபடியும் உத்தார ன்ம் பண்ணவேண்டுமென்று தீர்மானித்து அங்கத்தினரைச் சேர்க்க ஆரம்பித்தனர். இந்தச் சபையின் அங்கத்தினரெல் லாம் பிாமணர்களே, பிராமணர்களைத் தவிர மற்றவர்களை இந் தச் சபையில் அங்கத்தினராகச் சேர்த்துக்கொள்ளுவதில்லே யென்று ஒரு நிபந்தனே செய்து கொண்டனர். இச்சபையாரும் விக்டோரியா பப்ளிக் ஹாலில் நாடகங்கள் ஆட ஆரம்பித்தனர். இதன் மூலமாக இச் சபை:ாருக்கும் எங்கள் சபையினருக்கும் கொஞ்சம் பொரு ையுண்டாயது என்று நான் ஒப்புக்கொள்ள வேண்டியதே. இதன்பேரில் இச்சபையார் எங்கள் சபையில் மிகவும் அழகாய்ப் பாடிப் பெயர் பெற்ற எம். வை. சங்கசாமி ஐயங்கார் என்பவரை எங்கள் சபையினின்றும் நீக்கி, தங்கள் சபையில் சேர்த்துக் கொள்ளப் பிரயத்தனப் பட்டனர். இதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/88&oldid=727502" இலிருந்து மீள்விக்கப்பட்டது