பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 நாடகமேடை நினைவுகள் எப்படியாவது தடுக்க வேண்டுமென்று காங்கள் ஒரு சூழ்ச்சி செய்தோம். " சுகுணவிலாச சபையின் ஆக்டர்களாகிய நாங் கள் மற்றசபைகளில் ஆக்டு செய்வதில்லை என்று பிரமாணம் செய் கிருேம் ' என்று ஒரு பிரமாணக் கடிதத்தை வரைந்து அதில் காங்கள் எல்லோகம் கையொப்பமிட்டோம். அதை மெல்ல மறுநாள் ரங்கசாமி ஐயங்காரைப் பார்த்தபொழுது, நான் அவரை ஒரு புறம அழைத்துக் கொண்டுபோய்ப் படித்துக் காட்டி, அவரது கை யொப்பத்தையும் வாங்கிக்கொண்டேன்! அன்று அவர் செய்த பிரதிக்ஞையினின்றும் அவர் தன் ஆயுள் வரை அணுவளவும் மாறவில்லை. அவரது பந்துக்கள், நண்பர்கள் ஆபீஸ் உத்தியோகஸ்தர்கள், இன்னும் பெரிய மனிதர்கள் அதே கர் அவரது மனதைக் கலைக்க எவ்வளவோ முயன்றும், மாருதி ருக்தார்; எவ்வளவு முயன்றும் அவர் { {} f? ரு திருப்பதைக் கண்டு அந்தச் சபையார், கடைசியாக சுகுணவிலாச சபையில் சூத்தி ார்கள் மெம்பர்களாக இருக்கிரு.ர்கள், ஆகவே அவர்களோடு நாடக மாடும் பொழுது அவர்களுக்குப் பிராம்மணனுகிய நீ நமஸ் காசம் செய்யவேண்டி வந்தாலும் வரும், காலில் விழவேண்டி வங் தாலும் வரும் ஆகையால் அதை விட்டுவிட வேண்டும் என்று அவர் தகப்பனுர் மூலமாகவும் சொல்லிப் பார்த்தனர் ! இதை நான் இங்கு குறிப்பிட்டது, பிப சம்மணர்களுக்கும் மற்ற ஜாதி யாருக்கும் துவேஷம் உண்டு பண் ைவேண்டுமென் றல்; கான் எந்த ஜாதியாரையும் அவர்கள் ஜாதியின் பொருட்டுத் துவே ஷிப்பதில்லை என்கிற விஷயம் என் நண்பர்கள் அனைவரும் அறி. வார்கள்; ஆயினும் எங்கள் சபையைப் பற்றி நடந்த உண்மையை யெல்லாம், என் சிறிய நண்பர்களுக்கு உள்ளது உள்ள படி உரைத் திடல் வேண்டுமென்று. நான் தீர்மானிக்கிருக்கிறபடியால் இதை எழுதலானேன். அன்றியும் இம்மாதிரியாக எவ்வளவோ கிர்ப் பத்திக்கப் பட்டும், அக்த சங்கசாமி ஐயங்கார் அனுவள வேனும் மனம் நூறவில்லை என்பதை எல்லோரும் அறியும் பொருட்டு மாம. இவரது மன உறுதியை வியந்து, இவருக்கு நான் என்ன. கைம்மாறு செய்யக் கூகம் : இவர் இறந்து பல் வருடங்கள் ஆயின ; ஆயினும் இவர் எங்கள் சபைக்கும் எனக்கும் செய்த பேருபகாரத்திற்கு நான் செய்யத்தக்க கைம்மாறு என்னுளது? இதை எழுதும் பொழுது, என்னேயுமறியாதபடி கான் கண்ணீர் விடுகின்றேனே அது தான் ! மேற் சொன்னபடி எங்கள் சபை அங்கத்தினராகிய எம். வை, சங்கசாமி ஐயங்காை, மற்குெரு சபையார் வலித்துக் கொள்ளப் பார்த்தார்களே என்று அக்காலம் எனக்கு மிகவும் கோபம் பிறந்தது. அதன் மீது அச்சபையாரைத் தக்கப்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/89&oldid=727503" இலிருந்து மீள்விக்கப்பட்டது