பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 9] படேல் காட்சியில் நடித்தது இடைவிடா கைப்பை உண்டாக் கியது; வங்கிருந்தவர்கள் எல்லோரும் விதுரஷகன் வேஷம் இவ ருக்கு மிகவும் பொருத்தமானது என்று புகழ்ந்தனர். இவர் இான்கைந்து காட்சிகளில் நடித்து சபையோரைச் சந்தோஷிக்கச் செய்தபோதிலும், ஒரே காட்சியில் வந்த ராஜ கணபதி முதலி யார் இவரை விட நன்முக நடித்தார் என்பது என் அபிப்பிரா யம் ராஜகணபதி முதலியார் வழிப்போக்கனுன சாங்கன்’ வேடம் பூண்டார். அவருக்குப்பாடவே தெரியாது. பிறகு இங் நாடகத்தில் நடித்த அநேகம் சாரங்கர்கள், பல பாட்டுகள் பாடியபோதிலும் இவர், அன்றைத் தினம், ஒரு பாட்டும் பாட வில்லை. அதற்கு முக்கியமான காரணம், ஆமைக்கு எவ்வன ;ெ சங்கீதப் பயிற்சியுண்டோ அவ்வளவு பயிற்சி இவருக்கும் சங்கீ தத்தில் உண்டு என்பதே! இவரது வசனமெல்லாம் பத்து அல் லது பன்னிரண்டு வரிக்குமேல் இராது. இருந் தம் இவர் சாரங்க ணுக வேடம் பூண்டு பாத்திாத்திற்குத் தக்கபடி நடித்தது மிகவும் சிலாகிக்கத் தக்கதாயிருந்தது. டிக்கப்பட்ட நாடகங்களின் குணுகுணங்களை எடுத்துக் கூறுவதில் மிகவும் தேர்ச்சி பெற்ற ன்ன்பால்ய நண்பனாகிய நீனிவாச ஐயங்கார் ஒரு முறை இன்த 'லிலாவதி சுலோசனு’ பிறகு நடந்தபொழுது, கதாநாயகி, கதா நாயகன், மற்றுமுள்ள முக்கியமான பாத்திரங்களை யெல்லாம் விட்டு, இந்த ராஜ கணபதி முதலியார் சாரங்களுக கடித்தது தான் மிகவும் மெச்சத்தக்கத்ாயிருந்த தென, அக்காலத்தில் அச்சிடப்பட்ட 'இந்தியன்ஸ்டேஜ்" என்னும் பத்திரிகையில் எழுதியுள்ளார். இதற்குக்கொஞ்ச நாளைக்கு முன்பு தான் புதிதாய் எ க்கள் சபையைச் சேர்க்த அ. கிருஷ்ணசாமி ஐயர், காத்திமதி வேஷம் பூண்டனர் என்பதை முன்பே தெரிவித்திருக்கின்றேன். இவர் அன்று நடித்த கில் ஒரு வேடிக்கையான சந்தர்ப்பம் கே சிட்டது. இவருக்கு இரண்டு பாட்டுகள் இருந்தன. அவற்றுள் இரண்டா வதைப்பாடவேண்டிய சந்தர்ப்பத்தில் பாட மறந்து விட்டனர் : அக்காட்சி முடித்தவுடன், நான் நேபத்யத் (Green Roon) தில் வேஷம் பூண்டுக்கொண்டிருக்கும் பொழுது, என்னிடம் ஓடிவந்து 'சம்பக்கம் ! சம்பந்தம் என்னுடைய இாண்டானது பாட்டைப் பாடமறத்து விட்டேன்! என்ன செய்வது ' என்று கவலையுடன் கேட்டார். கான் உடனே அப்பாட்டைக் கொஞ்சம் மாற்றி, பின் வரும் காட்சியில் அதைச்சக்தர்ப்பத்திற் கேற்றபடி செய்து, அதில் பாடும்படியாகச் சொன்னேன். அப்படியே அதைப்படி முடித்தார் ஆக்டர்களாகிய எங்களுக்குத்தவிர நாடகத்தைப் பார்க்க வந்த மற்ற இனங்களுக்கு இது தெரியாது. இம்மாதிரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/96&oldid=727511" இலிருந்து மீள்விக்கப்பட்டது