பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 - நாடகமேடை நினைவுகள் வேடம் பூண்டு நடித்தபோது, பூர்வகாலத்திலிருந்த் முடுக்குட - - & "、""_rö :னேயே வெகு விமரிசையாக நடித்ததைக்கண்டு மகிழ்த்தேன். இவ. ரிடமிருந்து, இக்காடக ஆசிரியனுகிய rGr வீலாவதி பாத்திரம் நடிப்பதில் ஒன்றைக் கற்றுக்கொண்டேன் ! அதுவரையில் எங் கள் சபையில் இக்க நாடகம் ஆடியபொழு தெல்லாம், லீலாவதி, இரண்டாவது காட்சியில், தன் தங்கை சுலோசனையைக் கொல் வதற்காக பாலில் விஷமிடவேண்டிய சந்தர்ப்பத்தில், இரு காகி தப் பொட்டலத்தில் விஷமருந்தை வைத்து, அதை அப்பாலில் கொட்டிவிடுவது போல் நடித்து வந்தோம். இதுதான் விலாவதி ஆக்டருக்கு நான் கற்பித்தது. முதல் முதல் குப்பண்ணராவ் இந்த கோவிந்தசாமி ராவ் கம்பெனியில் நடித்த பொழுது, வெகு புத் தி சாதுர்யமாய்த் தன் ರಿಸವ್ಡಿ, ஒரு விஷத்தை இது சியமாய் வைத்து, அதை சுலோசனை யறியாதபடி பாலில் கலக்கி யதுபோல் நடத்துக் காட்டிஞர். அதைக் கண்டதும் எனக்கு ஆச்சரியமும் சந்தோஷமும் உண்டாயிற்று, இது தான் சரியான முறை, இனி இப்படித்தான் செய்யவேண்டு மென்று தீர்மா னித்து அதுமுதல் இந்த நாடகத்தை நடித்த பொழுதெல்லாம் இம்மாதிரியாகவே நடித்து வந்திருக்கின்ருேம். ஒரு விதத்தில் இந்த யுக்தி எனக்கு முன்பே தோன்ரு மற் போயிற்றே என்று வெட்கப்பட்டேன். அன்றியும் இதனுல் நான் இன்னுெரு பெரும் நன்மை அடைந்தேன். நாடக ஆசிரியனுகிய எனக்கு எனது நாடகத்தைப்பற்றி எல்லாம் தெரியும் என்று நான் அடைந்திருந்த கர்வமானது பங் கப்பட்டு, மற்றவர்களிடமிருந்து, நான் எழுதிய நாடகங்களி லேயே நான் கற்கவேண்டிய விஷயங்கள் அனேகம் இருக்கக் கூடும் என்னும் புத்திவந்தது. அது முதல் நான் எழுகிய நாடகங் களாயிருந்த போதிலும் அவற்றை மற்றவர்கள் கடிக்கும்போது, அதிலுள்ள நாடகப் பாத்திரங்கள் எப்படி நடிக்கிரு.ர்கள் என்று கவனமாய்ப் பார்த்து வரவேண்டு மென்னும் புத்தியுண்டா யிற்று. - இக் கம்பெனியில், அன்று மற்ற பாத்திரங்களாக நடித்த வர்களுடைய ஆக்டிங் எனக்குப் பிடிக்கவில்லை. 'பஞ்சண்ணு' என்கிற செல்லப் பெயர் பெற்ற பஞ்சநாதராவ் என்பவர், விதுள் ஷகனகிய விசித்திர சர்மாவாக நடித்தது மாத்திரம் கொஞ்சம் சமாக இருந்தது. நாடகம் முடிவதற்கு வெகு நேரமாகியும் கடைசிவாயில் உட்கார்ந்து பார்த்துவிட்டுப் போனேன். நாம் எழுதிய நாடகத்தை ஜீவனத்திற்காக நாடகமாடுபவர்களும் ஆடி ஞர்களே, என்னும் சந்தோஷத்துடன் அன்றிரவு உாங்கினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/99&oldid=727514" இலிருந்து மீள்விக்கப்பட்டது