10
10 எல்லாக் காரியங்களும் வியைகரை முன்னிட்டு நடைபெறு வதைக் கவனிக்கவும். துவஜாரோகணம் : பிரம்மோற்சவத்தின் முதல் காள் காலே இது நடைபெறும். துவஜாரோகணம் என் ரல் கொடியேற்றுதல் என்று பொருள்படும். கர்ப்பக்கிச ஹத் தின் எதிரில் இருக்கும் உயரமான துவஜஸ்தம் பத்தில் சிவபெருமானுடைய கொடியை மந்திரங்களோடு ஏற்றுதலாம். இந்தக் கொடியில் ரிஷபம் முக்கியமாய் எழுதப்பட்டிருக்கும். (ரிஷபக்கொடியோன் எனும் பெய ரைக் காண்க. அன்றியும் கிரிசூலம் முதலிய சின்னங்க ளும் எழுதியிருக்கும். இக்கொடி சாதாரணமாக கோயி லுக்கு வெளியிலிருந்து பார்த்தாலும் தெரியும். இதைக் கண்டவுடன் ஊரிலுள்ள ஜனங்களுக்கெல்லாம் பிரம் மோற்சவம் ஆரம்பமாகிவிட்டது என்று தெரியும். (இங்கிர விழாவில் இந்திர தவஜத்தைப் பற்றி முன் ல்ை கூறி யிருப்பதை ஒத்திட்டுப் பார்க்க.) முதல் நாள் உற்சவம் : மேற் குறித்தபடி கொடி யேறியவுடன் முதல் நாள் உற்சவம் ஆரம்பமாகும். திரு மயிலே பிரம்மோற்சவத்தை உதாரணமாக க் கொண்டு அங்கு ஈடக்கும் பத்து நாள் உற்சவத்தையும் விவரிக் கிறேன். ஏறக்குறைய எல்லா சிவாலயங்களிலும் இதே மாதிரியாகத்தான் நடைபெறும். - சைவ ஆகமப்படி பிரம்மோற்சவத்தில் காலே மாலை பஞ்ச மூர்த்திகளும் புறப்பாடாக வேண்டும். பஞ்ச மூர்த்தி களென்ருல்:-1. வினுயகர் 2. வள்ளியம்மை தெய்வயானை சமேத சுப்பிரமணியர், 3. சோமா ஸ்கந்த மூர்க்கி (பரம சிவமும் பார்வதியும் இடையில் சிறிய பால சுப்பிரமணிய ருடன் வீற்றிருக்கும் கோலம்) சோம + உமை + ஸ்கந்தர். சோமா ஸ்கந்த மூர்த்தியின் இடையில் பால சுப்பிரமணியர் இருப்பது அலங்கார காலத்தில் தெரியாது, அபிஷேக காலத்தில் வேண்டு மென்ருல் பார்க்கலாம்). 4. தனியம் மன் 5. சண்டே சுவார். முதல் நாள் காலே உற்சவத்தில் பஞ்ச மூர்த்திகளும் பவழக்கால் சப்பரங்களில் புறப்பா டாகும.