11
11 இது முதல் பத்து நாட்களும் உற்சவம் பூர்த்தியாகும் வரையில் காலை மாலைகளில், ஸ்வாமி உற்சவமாகுமுன் அஸ்திராயர், முன்பு மாட விதிகளை வலம் வருவார். அஸ் திராயர் என்ருல் சிவபெருமானது ஆயுதமாகிய சூலம். இதை எடுத்துக் கொண்டு முதலில் மாட வீதியை வலம் வருவதற்கு முக்கி காரணம், அவ் வீதிகளில் அசுபங்கள் ஒன்றும் இல்லாததை கவனிப்பதற்காக. அஸ்திர ராயர் வலம் வந்த பிறகுகர்ன் ஸ்வாமி புறப்பாடாகும். (வைஷ் ணவ ஆலய பிரம்ம் உற்சவங்களில் மகாவிஷ்ணுவின் ஆயுதி மாகிய சக்ரத் தாழ்வார் இதே மாதிரியாக தினம் வலம் வருவதை ஒத்திட்டுப் பார்க்க). முதல் நாள் இரவு உற்சவத்தில், ஸ்வாமி ஸ்கல விருட்ச மாகிய புன்னே விருட்ச வாகனத்தில் எழுந்தருளுவார். இச் சமயம், உமை மயில் வடிவாக ஸ்வாமியை பூசிப்பது போல அலங்காரம் செய்யப்படும். அம்மனுக்கு கற்பக விருட்சம் - சுப்பிரமணியருக்கு வேங்கை விருட்சம். ஒவ்வொரு நாள் உற்சவத்திலும் ஸ்வாமிக்கு அலங் காரம் முடிக் ச உடன் தீப ஆராதனை ஆகி, ஸ்வாமி உள் பிராகாரம் சுற்றி வருவார். அப்படி வரும் பொழுது வட கிழக்கு மூஃ வள்ள யாகசா வே எதிரில் கின்று ரட்சையை பெற்று பிறகே வாகனத்தின் மீது ஆரோகணிப்பார். ஸ்வாமியை வாகனத்தின் மீது ஏற்றும் பொழுது திரை போடப்படும். வாகனத்தின் மீது சரியாக பந்தனம் செய் யப்பட்டபின் திரையை நீக்கி தீப ஆராதனை செய்வார் கள். பிறகு வாகனத்துடன் கோபுர வாயிலுக்கு நடுவில் வரும் பொழுதும் பெரிய தீப ஆராதனை கடக்கும் (கற்பூ ரார்த்தியாக) இக்காட்சி மிகவும் அழகியதாயிருக்கும். கோபுர வாயில் காட்சியைக் காண வேண்டும்என்று பக்தர் கள் ஆயிரக்கணக்காக வெளியில் கூடி இருப்பார்கள். பிறகு கோயிலுக்கு எதிரிலுள்ள 16 கால் மண்டபத் தில் பஞ்சமூர்த்திகளும் ஒருங்கு சேர்வார்கள்; பிறகுசுவாமி மாடவீதி வழியாக பிரதட்சணம் வருவார் சகல வைபவங் களுடனும். ஆங்காங்குள்ள பக்தர்களில் மண்டபப்படி நடக்கும். சுவாமி ஈசான்ய மூலையில் வந்தவுடன் சகல