பக்கம்:Over Forty Years Before The Footlights-2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

r; 27 வாகனத்திலும், ஆற்றின் நடுவில் சந்திக்கும் உற்சவமாம்ஒரே காலத்தில் இரண்டு மூர்த்திகளுக்கும் போராதனை ஆகிறது பார்க்கத்தக்கது. இம்மாதிரியான சந்திப்பு உற்சவம் சென்னைக்கடுத்த கோழம்பேட்டிலும் கடை பெறுகிறது; மீஞ்சூரிலும் நடைபெறுகிறது. மெத்தைஉற்சவம்; இது இப்பகம் குறிக்கிறபடி மெத்தையின் மீது சுவாமியை ஆரோகணித்து, உற்சவம் நடத்துதலாம். காஞ்சீபுரக்சில் இது வைகாசி மாசம் கடைபெறுகிறது. 9 நாள் உற்சவம். அன்னுபிஷேக உற்சவம். இது ஐப்பசிமாசம், கடை பெறுவதாம்;லிங்கத்திற்குளதிரில்திருப்பாவாடையாக அன் னம் சமர்ப்பிக்கப்பட்டு, கிவேதனமாகும். திருஒற்றியூரில் இக்க உற்சவம் விசேஷம். இச்சமயம் பிருக்விலிங்கத்தின் மீதிருக்கும் கவசம் களையப்பட்டு, தரிசனமளிக்கப்படும். கும்பாபிஷேக உற்சவம்: இது பல வருடங்க ளுக்கு ஒரு முறை கான் கடத்தப்படும் உற்சவம். ஆகமப் படி 60 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது கும்பாபிஷேகம் செய்யவேண்டுமென்று சொல்லப்படுகிறது. இடையில் ஏதாவது மூலஸ்தானங்கள் புதிதாய் ஏற்பட்டாலும், அல்லது மராமத்து செய்யப்பட்டாலும், கோபுரங்கள் முதலியன கட்டப்பட்டாலும், மூல விக்கிரகங்களின் அஷ்டபக்தனங்கள் கிலமாகி அசைவுற்ருலும், அவை, களுக்குத் தக்கவாறு, கும்பசபிஷேகம் செய்யவேண்டும், மஹாகும்பாபிஷேகம் கடப்பதென் ருல் கோயில் முழு தும் மராமத்து செய்யப்பட்டு, மூலவிக்கிரகங்களுக்கும் உற்சவ விக்கிரகங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்வதாம்: இதில் பல கலச ஸ்தாபனங்கள் செய்து, தினந்தோறும் யாகம் கடத்தி, கடைசி நாள், அக்கும்பங்களிலுள்ள தீர்த்தங் களால் மேற்கண்ட விக்ரஹங்கள் முதலியவைகளை சுத்தி செய்வதாகும் (கும்பம்-கலசம்). சஷ்டி உற்சவம்: இ சுப்பிரமணியருக்கு உரியது. ஐப்பசி மாதம் 6 நாட்கள் உற்சவம். கிருவையாறு, சிக்கல், திருப்பாங்குன்றம், குன்றக்குடி முதலிய இடங்களில்