5
பத்து நாட்கள் தற்காலம் நடைபெறும் உற்சவம் இதில் குறிக்கப்படாதது கவனிக்கத்தக்கது) கோயில்களிலுள்ள கல்வெட்டுகளில் பல மாச உற் சவங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன; உதாரணமாக1919 u வெளியிடப்பட்ட சில சாசனங்களில் 432 எண்ணுள்ள தில், ஆடி, புரட்டாசி மாச உற்சவங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. நான் ஆராய்ந்து பார்க்க வரையில் பிரம்மோற்சவம் என்பது ஒரு சிவாலயத்து சிலாசா ஆனத்திலும் குறிப்பிடப்படவில்லே. திருவாரூரில் உள்ள சில சாசனத்தில் அந்த ஆலயத் தில் வருடாந்தாம் நடக்கவேண்டிய முக்கிய உற்சவங்கள் எல்லாம் குறிக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும், தற்காலம் நடைபெறும் பிரம்மோற்சவம் குறிக்கப்படவில்லை. வசந்தோற்சவம் :- சிலாதித்யன் (ரீஹர்ஷர்) (கி.பி. 7-ஆம் நூற்ருண்டு) காலத்தில் கொண்டாடப்பட்டது. இந்திரோற்சவமும் கொண்டாடப்பட்டது. திருவிடைமருதுரில் உள்ள இரண்டு கல் வெட்டு களில் தைப்பூச உற்சவம் குறிக்கப்பட்டிருக்கிறது. கரூரில் உள்ள ஒரு கல் வெட்டில் உள்ளி விழா என்று ஒரு உற்சவம் குறிக்கப்பட்டிருக்கிறது. 1918-ஆம் வருடத்திய 482-ஆம் கல் வெட்டில் படி வேட்டை (பாடி வேட்டை அல்லது பரி வேட்டை) உற்சவ மும், கோப்புத் திரு நாள் (வன போஜன உற்சவம்) என்ற உற்சவமும் குறிக்கப்பட்டிருக்கின்றன. 1913-ஆம் வருடத்திய 269-ஆம் கல்வெட்டில் சிவகாம சுங் கரிக்கு புளியீடு திரு நாள் குறிக்கப்பட்டிருக்கின்ற தி. அன்றியும் இவ் வருஷத்திய 275-ஆம் கல வெட்டில் உற்சவ விக்கிரஹங்கள் கடலுக்குக் கொண்டு போவதைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறது. மேற்குறித்த உற்சவங்கள் எல்லாம் ஏறக்குறைய பெளர்ணமி தினங்களில் கடப்பன் என்பது கவனிக்கக் தக்கது. (கற்காலம் சிவாலய பிரம்மோற்சவங்கள் வளர் பிறையில் ஆரம்பித்து பெளர்ணமி யன்று முடிவது கவ னிக்கத் தக்கது. ஆதியில் கோயில்களில் மூல விக்கிாஹங் 2 -