பக்கம்:Pari kathai-with commentary.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 (2. வளம்பாடு குறித்தது. அரிதிற் புக்காலும் தம் அரசன்கொடியை விடாத படை ஞரால் என்க. பல்வரையால்-பல பக்கமலைகளால்; மக்களமைத்த எயிலானன்றி இயல்பாக அமைந்த மலையானும் உண்டென்பது குறித் தது. 'மணிருே மண்ணு மலேயு. மணிவிழற், காடு முடைய தாண்' (குறள் 742.) மணிர்ே என்பதற்கு விழுச்சனையும், மண் என்பதற்கு வல் லெயிலும், மலை யென்பதற்குப் பல்வரையும், அணி விழற்காடு என்ப தற்குக் கொல்களிருர்கானும் கூறியவாறு. மூவேந்தர்க்கேயும்-ஒருங்கு கூடிய மூன்றரசர்க்கே யாயினும்; முனைத்ற்கரிது-போர்செயற் கரியது என்றது, பேரிசையுருமொடு மாரி முற்றிய, பல்குடைக் கள்ளின் வண் மகிழ்ப் பாரி, பலவுறு குன்றம் போலப், பெருங்கவி னெய்திய வருங் காப்பினளே' (நற்றின. 253) என்பது குறித்தது. எழிற் பறம்பு என்க. பாவேந்தர்க்கு ஏயும் பறம்பு-பாடற்றலைவர்க்கு எளிது பொருக் திம் பறம்பு. எய்தல்-அடைதல், "எயிற்று........ அகிலின் புகை." (சிக்: முத்தி 4.06.) எனவரும். பகைஞர்க் கருமையும் புகழ்வார்க் கெளிமையும் உடையது எ-று. - (13) 28. வள்ளிக் கிழங்கு மதுவும் பலச்சுளையும் வெள்ளிக்கிலங்கும் வேதிர்நெல்லுங்-கொள்ளையேன வேரோ ருழாதன யாண்டும் விளையுமே பாரோர் தொகுவேள் பறம்பு. (இ-ள்.)-வள்ளிக் கொடியின் கிழங்கு, மது-தேன்; பலச்சுளைபலாவின் சுளை; சுளைகளிையிவை யினியன பலவாழை' என்பது லே கேசி. வெள்ளியினும் மிக்கு விளங்கும் மூங்கில் நெல், மூங்கிலின் வண்ணெல் என்று கொள்க. கொள்ளை-திரள். ஏரோர் உழாதனஏர் உடையார் தம் ஏர் கொண்டு உழுது விளையாதன. இக்கான்கும் யாண்டும் விளையும்-எங்கும் விளையும்; இச்சிறப்பான் உலகினுள்ளார் துய்த்தற்குக் குழாங் கொள்ளும் பறம்பு என்க. பறம்பின்கண் உழா தன விளையுமென்க. நான்கு பொருள்கள் கூறியது நால்வகை யுணவும் அடங்கல் வேண்டி; நால்வகையமுதம்' (சிந்தாமணி-1937) என்ப.வெதிர் நெல்-உண்பது; வள்ளிக்கிழங்கு-தின்பது; பலாச்சுளைஇனிய சேற்ருல் கக்குவதேயாம். சேறு காற்றமும் வேறுபடக் கவினிய பலவின் சுளே' என்பது மதுரைக்காஞ்சி. 'பலவினளிந்து வீழ் சுளை' என்பது சிந்தாமணி (2109). மது-பருகுவது. 'விருந் தோம்பி மிச்சில் மிசைவான்புலம்' (குறள். 85) ஆதலின் உழாது வித்தாது விளைதல் காட்டியவாறு. இஃது உழவ ருழாதன நான்கு பயனுடைத்தே' என்னும் புறப்பாட்டைத் (109) தpஇ யுரைத்ததி. (14)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/122&oldid=727748" இலிருந்து மீள்விக்கப்பட்டது