பக்கம்:Pari kathai-with commentary.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 163 விலங்களின் வழி. இவள் புக்க நெறியில் நெய்தலே யில்லாமையால் இங்ஙனம் கூறப்பட்டது. உணராது அரிது செலலுற்ருள் என்க. இவள் விட்ட ஆராகிய தகடூர், மலையல ரணியுந் தலைகீர் நாடன் (புறம் 390) தலைநகராதலானும் அது பூந்துறை நாட்டதாதலானும் முதற்கண் மாரியூறு கூறப்பட்டது. கொங்கிற்கு 'வடக்குப் பெரும் பாலை' (பழம்பாடல்) என்பதனுைம் இதற்கியையவே 'வானவரம்ப னன்னட்டும்பர், வேனினிடிய வெங்கடற் றடைமுதல்" (அகம்-389) என அகப்பாட்டில் வருதலானும் வெயிலுாறு பிற்கூறப்பட்டது. நெறி கடந்துழி நெய்தலொழிய நானிலங் கோடல் பெருங்கதை யினுங் கண்டது. உளம் ஈர்த்து விரைதலான் உடலுணர்திற்கில்லை என்றதாம். எல்லானைக் காணவேட்டு ஊறுணராது அரிது சேறலாற் சீரியாள் எனப்பட்டாள் எனினுமமையும். 'நல்லாரைக் காண்பதிவு நன்றே' என்பது வினைக்க. (11) 241. அசும்பின் வயனேறியு மாமிழியும் வேற்பி னிசும்பி னிடைகேறியு மேகி-விசும்பு துளிமறந்த வன்பாற் சுடுகிலனுஞ் சென்ருள் களிறுறைந்த கானுங் கடந்து. (இ-ன்.)-அசும்பின் வயல் நெறியும்-ர்ேக்கசிவினையுடைய விளைவயல் வழிகளும்; வயல் வரப்புக்களின் நீர்க்கசிவுண்மை குறித் தது. ஆமிழியும் வெற்பின்-நீர்வழியும் மலைகளினுடைய, ஆமிழி அணிமலை" என்பது (குறிஞ்சிக்கலி. 12). இசும்பினிடை நெறி-ஏற்றி ழிவுகளின் இடைப்பட்ட வழிகளும். இசும்பு-ஏற்றிழிவு. விசும்பு துளிமறந்த பாலே-வானம் துளி பெய்தலே மறந்த பாலை. இயல்பாக யாண்டும் பெய்யும் வானம் ஆண்டுப் பெய்யாமைக்கு மறவியே காரண மென்று கருதிற்று. வன்பாலாகிய சுடுகின்ற கிலன்; பாலையில் நெறி கூருது விலனென்ருெழிந்தது ஆண்டுப் புகுவாரின்மை குறித்தது. வன்பால்-வலிய பகுதி; ம்ென்பாற்கு எதிரிடை. களிறுறைந்த கான் மலையடுத்த முல்லை கிலனுகக் கொள்க. வயனெறியால் மருதமும் வெற்பினிடை நெறியாற் குறிஞ்சியும் சுடுவிலற்ை பாலையும் கானுல் முல்லையுங் குறித்தல் காண்க. (12) 242. கொங்கி னடந்து குளிராவி நன்குடிபோ யெங்கும் புலவ ரெதிர்கோள்ளப்-பொங்கர் மதுப்பொழியும் வையை வளநாட்டி னுள்ளம் வேதுப்போழியப் புக்காள் விழைந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/260&oldid=727900" இலிருந்து மீள்விக்கப்பட்டது