பக்கம்:Pari kathai-with commentary.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 187 னை' என்பர் கம்பங்ாடர். உடல் குளிர்விக்கு மதியினும் உள்ளங் குளிர்விக்குஞ் சிறப்புத் தோன்ற முகனுக்குத் தட்பங் கூறப்பட்டது. கருணையின் பெருக்கத்தால் மடைதிறந்த தன்மையவாகிய கண்க ளும் எ-மு. பொருளால் விருப்பங் கொள்ளத்தக்க இனிய மொழியும், அவ்வினிய மொழியை யுண்டாக்கும் செஞ்சத்தன்பும், இவை பெல்லாஞ் சேரத் தோற்றஞ் செய் அழகும்: ஒளவை கண்டு என்க. இவற்கு இணை என் மொழிவலென்ருள்-இவனுக்கு உவமை யாது மொழிவேன் என்ருள் எ. று. (55) 235. கோடையறமே யிம்மலையிற் கோலோச்சு கின்ற திடையறவி லாமேயென் றெண்ணிப்-புடையுறான் மாரியெதிர் கண்ட மயில்போ லுளங்களித்தாள் பாரியெதிர் மூதெளவை பார்த்து. (இ-ள்)-கொடையறமே - கொடையாகிய அறம் ஒன்றே. கொடையறம்-இருபெயரொட்டுப் பண்புத்தொகை. கோலோச்சும்பாரி கொடையறமே என உருவகஞ் செய்தவாறு; சிராமமூர்த்தியைக்கண்டு வீடணன் அறவிறங்கரிகோவென்முன் எனக் கம்பகாடன் கூறிய தன ஈண்டைக்கு வினைக்க. இடையறவு-இடையில் அறுதல். இடை பறுதல் அறத்தின் மாமுகிய பாவம் உள போதாதலின் அஃதெய்தாத படி ஒச்சுகல் குறித்தது. நன்மாரி புடையுற எதிர்கண்டமயில்-கன் மையைச் செய்யும் முகிலத் தன்பக்கலிலே பொருந்த எதிரிற் பார்த்த மயில். மூது ஒளவை-அறிவுடைய ஒளவை. முன்னே "இவற்கு இன என்சொல்வல்' என்றவள் ஈண்டு இணைசொல்லாது இவனைக் கொடையறமே எனத் துணிந்தது காண்க. மாரியைக்கண்டவளவிலே மகிழ்தலான் மயில் ஒளவைக்குவமையாயிற்று. (56) 286. கல்வித் திறனுங் கவித்திறனுங் சொற்றிறனும் பல்வித் தகமும் பகுத்தறியச்-செல்வி சிலவே மொழிந்தாள் செருவெஞ்சேய் பாரி பலவா றுவந்தான் பரிந்து. (இ-ஸ்)-கல்வித்திறன்-கல்விவன்மை. கொல்லப் பன்னூல் வன்மையைக் குறிப்பது. கவித்திறன்-அத்தொன்னூற் செய்யு ளொப்பச் செய்யும் செய்யுள்வன்மை. சொற்றிறன்-அவ்விரண்டை யும் பொருள் விளக்கவல்ல சொல்வன்மை. பல்வித்தகம்-இவற்றிற்குக் காரணமாகிய பல்வகைச் சதுரப்பாடு. பன்னெறியுஞ் சென்றுண்டிை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/284&oldid=727926" இலிருந்து மீள்விக்கப்பட்டது